back to top
24.9 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeஅரசியல்விஜய் சேதுபதியின் LEADERSHIP ADVICE... விஜய்தான் டார்கெட்டா? - Kumudam

விஜய் சேதுபதியின் LEADERSHIP ADVICE… விஜய்தான் டார்கெட்டா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வரும் நிலையில், இந்த சீசனில் மொத்தம் 29 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிளாக் பாண்டி தலைவராக செயல்பட்டு வந்த நிலையில், உடல் நலகுறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஷாத்திகா, பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (13.09.2026)  நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷாத்திகாவிடம் தலைமை குறித்து விஜய் சேதுபதி கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது,   லீடர் மற்றும் லீடர்ஷிப் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும் போது எதிரணி மீது பழியைத் தூக்கிப்போட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதற்கு பெயர் ஏமாற்றுவேலைஎன்று தெரிவித்தார்.

தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கின்றனர். விஜய் சேதுபதி மறைமுகமாக முதலமைச்சரை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை உருவாகி உள்ளது.
பொறுப்பில் இருப்பவர்களிடம் கருத்துக் கேட்டால், அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அதுதான் அவர்களது வேலை. அதற்காக அழுது சமாளிக்கக்கூடாது. நல்லவன் வேடம் போடுபவர்கள் எவ்வளவு உறுதியாக வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால், அனைவருக்கும் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டுமே! அழுகிற ஒருவருக்கு ஆதரவாகச் செல்ல வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதனால் நீங்கள் டம்மியாகத் தெரிவீர்கள். ஜோக்கராகிவிடுவீர்கள்” என விஜய் சேதுபதி கடுமையாக பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசியதும், அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று அவருக்கு சப்போர்ட்டாக சிலர் குரல் கொடுக்கின்றனர். அதில் என்னங்க நியாயத்தை பார்த்தீங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசணுமா என்று அவருக்கு எதிராகவும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு முன்பு கமல்ஹாசன் இது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசியிருக்கிறார் ஆனால் அப்போதெல்லாம் இந்த மாதிரியான சர்ச்சைகள் வந்ததில்லை.

இதற்கு முந்தைய அரசுகளை கமல்ஹாசன் விமர்சித்து பேசி இருக்கிறார். ஆனால் அப்போது கமல்ஹாசனை இப்படி தனிப்பட்ட ரீதியில் யாரும் தாக்கி பேசியதில்லை. ஆனால் இப்போது விஜய் சேதுபதி பேசியதும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி பேசி விட்டார் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் விஜய் சேதுபதியை தாக்கி கமெண்ட் போட்டு வருவதை பார்க்க முடிகிறது.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் தன்னை பற்றி இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது கூட விஜய் சேதுபதி தான் எதற்காக அப்படி பேசினேன் என்று விளக்கம் கொடுக்காமல் இருப்பதும் தான் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய அமைதியை பார்க்கும் போது ஒருவேளை விஜய் சேதுபதி விஜயை தாக்கி தான் இப்படி பேசினாரா? அதனால் தான் அமைதியாக இருக்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

விஜய் சேதுபதியின் சைலண்ட் ஆனால் இப்போ நடக்குற பஞ்சாயத்தை எல்லாம் பார்க்கும்போது இது கூட பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். போன சீசனில் இந்த நிகழ்ச்சியை பற்றி பெரியதாக பேசப்படாமல் இருந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதி சொன்ன வார்த்தைகள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இந்த நிகழ்ச்சியை பற்றி பேச வைத்துவிட்டது.

இதனாலேயே இந்த வாரம் முழுக்க சைலண்ட் மோடில் இருக்கும் விஜய் சேதுபதி இதற்கெல்லாம் சேர்த்து சனிக்கிழமை எபிசோடில் பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

முதலில் லீடர்ஷிப் பற்றி பேசி இருந்தார். பிறகு பொறுப்பில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும், கண்ணீர் விட்டு சமாளிக்கக்கூடாது என்று பேசி இருக்கிறார். இது அந்த நிகழ்ச்சியில் முதல் வார தலைவராக இருந்த ஷாதிகாவை பார்த்து சொன்னதா? அல்லது தற்போதைய அரசியல் நிகழ்வுகளை வைத்து விஜயை கேள்வி கேட்கிறாரா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், தலைமைத்துவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியதற்கு, ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அதிமுக எம்.பி., இன்பதுரை  நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, சட்ட ரீதியாகத் துணை நிற்போம்” என்று தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here