back to top
24.9 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeதமிழ்நாடுவிஜய் - அஜித் சந்திப்பு... உறுதிப்படுத்திய ரேஸ் நிர்வாகம்! - Kumudam

விஜய் – அஜித் சந்திப்பு… உறுதிப்படுத்திய ரேஸ் நிர்வாகம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற உள்ள Michelin Le Mans Cup கார் பந்தயத்தில், அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது. இந்த பந்தயத்தில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக Michelin Le Mans Cup அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Michelin Le Mans Cup வெளியிட்ட முக்கிய அறிவிப்பு :

Michelin Le Mans Cup தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த வார இறுதியில் சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெறும் பந்தயத்திற்கு சிறப்பு விருந்தினர் பச்சைக்கொடி காட்ட உள்ளார். இந்திய நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களுக்கு ஆதரவளிக்கவும், 44 கார்கள் பங்கேற்கும் பந்தயத்தை பச்சை கொடி அசைத்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவும் வருகிறார்” என தெரிவித்துள்ளது.

மேலும், சனிக்கிழமை நடைபெற உள்ள Silverstone Round பந்தயத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அஜித்தின் ரேசிங் பயணம்… ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு :

நடிகர் அஜித் குமார் நீண்ட காலமாக கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவர். அவரது ரேசிங் பயணம், போட்டிகளில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘Gladiators – In Pursuit of Challenges’ ஆவணப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

அஜித் குமார் ரேசிங் அணி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில், சில்வர்ஸ்டோன் கார் பந்தயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒரே இடத்தில் விஜய் – அஜித்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அதே காலகட்டத்தில் சில்வர்ஸ்டோனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயமும் நடைபெற உள்ளதால், விஜய் – அஜித் சந்திப்பு நிகழுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

தற்போது Michelin Le Mans Cup வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், விஜய் சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பேசுபொருளாகும் நிகழ்வு :

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நடிகர்கள். இருவரும் ஒரே நிகழ்வில் பங்கேற்பது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் சினிமா வட்டாரத்திலும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் விஜய் கலந்து கொண்டு அஜித் குமார் ரேசிங் அணியை உற்சாகப்படுத்த உள்ள நிலையில், இந்த நிகழ்வு சர்வதேச அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here