back to top
18.4 C
London
Sunday, August 2, 2026
No menu items!
Homeசினிமா"இன்றுதான் எங்களுக்கு பொங்கல்" - 'ஜனநாயகன்' வெளியீட்டை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்! - Kumudam

“இன்றுதான் எங்களுக்கு பொங்கல்” – ‘ஜனநாயகன்’ வெளியீட்டை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன்  பொங்கல் பண்டிக்கை நாளன்று கடந்த ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால் தணிக்கை சான்றிதழ் தாமத்தினால் படம் தள்ளிப் போனது. குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகமல் போனதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

என்றைக்கு ஜனநாயகன் படம்  வெளி வருகிறதோ அன்றைக்கு தான் எங்களுக்கு பொங்கல் என்று கூறினார்கள். இந்நிலையில் தமிழகத்தில் சட்டசபை நெருங்கிய நேரத்தில் ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம், இப்படி இணையத்தில் வெளியாகிவிட்டதே என்று தயாரிப்பாளர் தரப்பு உள்பட விஜய் ரசிகர்களே அதிர்ச்சி அடைந்தனர். ‘ஜனநாயகன்திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப் பேற்று கொண்டார்.அதன் பின்னர் ஜனநாயகன் படத்திற்கு இருந்த சிக்கல் ஒவ்வொன்றாக தீர்ந்தது. இ,றுதியாக படத்திற்கான ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மாதத்திற்கு மேலாக ஜனநாயகன் படம் இன்று எட்டாயிரம் திரையரங்குகளில் ஜொலித்து கொண்டு இருக்கின்றது.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகத்தில் காலை 6 மணிக்கே சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 1,000 திரையரங்குகளில்  மேலும் இன்று ஜனநாயகன் தமிழ்நாட்டில் காலை 9  மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டு எல்லா திரையரங்குகளிலும் விஜயின் ரசிகர்கள் கூட்டம் மற்றும் தவெகவின் தொண்டர்கள் ஆகியோர் ஆரவாரத்தோடு கொண்டாடி தீர்க்கின்றனர்.

முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை பைக் மற்றும் அனைத்து இடங்களிலும் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் போன்று மாலை அணிவித்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜனநாயகன் இன்று வெளியானதால் இன்றைக்கு தான் எங்களுக்கு பொங்கல் என்று ஆரவாரத்தோடு கொண்டாடிகின்றனர்.

நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகன் வரை முதல்அமைச்சர் விஜய் நடித்த படங்கள் அடங்கிய ஒற்றை பேனர் ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளதுசென்னை ரோகிணி திரையரங்கில் முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் பட முதல் காட்சியை அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள திரையரங்குகளில் அமைச்சர் முகமுது பர்வேஷ் கண்ணீர் சிந்தியபடி பார்த்து வருகின்றனர்.

கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள திரையரங்கில் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் ஜனநாயகன் படத்தை பார்த்தார். குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஜனநாயகன் படம் பார்த்தனர்.

மேலும் ரசிகர்கள் ஆரவாரத்தோடு பாடல் போட்டு ஆடிக்கொண்டு திருவிழாக் கோலமாக அனைத்து திரையரங்குகளும் இருக்கின்றது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here