back to top
20.1 C
London
Tuesday, October 13, 2026
No menu items!
Homeதமிழ்நாடுயூனிட் ரூ.35 ❌, 3 மணி நேரம் கரண்ட் கட் ✅ ! அமைச்சரின் விசித்திர...

யூனிட் ரூ.35 ❌, 3 மணி நேரம் கரண்ட் கட் ✅ ! அமைச்சரின் விசித்திர விளக்கம் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்கு மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற விலையில் தற்காலிகமாகக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு மட்டும் 1,500 மெகாவாட் அளவிலான கேஸ் மின்சாரத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கும், மின்வாரியத்தின் நிதிநிலை தொடர்பான கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மின்வெட்டைத் தவிர்க்கவே தற்காலிக ஏற்பாடு!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் மின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பதால் தேவையைப் பூர்த்தி செய்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் நிர்மல்குமார், மின்சாரத் தேவையைச் சமாளிக்க 3,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்தாலும், தற்போது 1,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தக் கொள்முதல் அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரத்தை அதிக விலையில் வாங்குவது அரசின் நிரந்தரத் திட்டம் அல்ல என்றும், தேவையான நேரத்தில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான அவசர நடவடிக்கை மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மின் தேவை 21,000 மெகாவாட்டாக அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 16,000 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, இந்த ஆண்டு 21,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 1,800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், காற்றாலை மின் உற்பத்தி மூலம் எதிர்பார்க்கப்பட்ட 3,000 மெகாவாட் மின்சாரமும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய மின் தொகுப்பிலிருந்தும் போதுமான மின்சாரம் கிடைக்காததால், தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதிக விலை கொடுத்து கேஸ் மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்த ஏற்பாட்டை மேற்கொள்ளாவிட்டால், சில பகுதிகளில் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்வாரியக் கடன் அதிகரிக்குமா?

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கும் முடிவு தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதிநிலையைப் பாதிக்கக்கூடும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஏற்கெனவே சுமார் ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வது எதிர்காலத்தில் மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், ரூ.35 என்ற விலை அனைத்து மின்சாரக் கொள்முதலுக்கும் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். வழக்கமான முறையில் ஒரு யூனிட் சுமார் ரூ.8 என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதிக விலை கொள்முதல் என்பது குறிப்பிட்ட காலத்திற்கான தேவையை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சாரக் கொள்முதலால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்டகால ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சர் விளக்கம்!

முந்தைய திமுக ஆட்சியில் குறைந்த விலையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களைத் தற்போதைய தவெக அரசு ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நீண்டகால ஒப்பந்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படாததே தற்போதைய சூழலுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மின்சார உற்பத்தி, கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விவரங்களை இணையவழியில் கண்காணிக்கும் வகையில் நேரடி தரவுப் பதிவுகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களுக்கான பணிகள் இந்த மாதம் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர் எழுப்பிய கேள்வி!

இதற்கிடையே, அண்டை மாநிலங்கள் மின்சாரத் தேவையை முன்கூட்டியே கணித்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கியதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு ஏன் முன்கூட்டியே கொள்முதல் செய்யவில்லை என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றும் அவர் வினவினார்.

இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது அமைச்சர் பதிலளிக்காமல் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மின்வெட்டைத் தவிர்ப்பதற்கான அவசர நடவடிக்கை என அரசு விளக்கமளிக்கும் நிலையில், மறுபுறம் கொள்முதல் திட்டமிடல் மற்றும் நிதிச் சுமை தொடர்பான கேள்விகளுக்கு வெளிப்படையான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here