back to top
17.2 C
London
Tuesday, October 13, 2026
No menu items!
Homeஅரசியல்தாராபுரத்தில் அதிமுகவுக்கு ஆபத்து! திமுகவின் புதிய வியூகம்.. தவெக வெற்றிக்குப் பின்னால் நடந்தது என்ன? -...

தாராபுரத்தில் அதிமுகவுக்கு ஆபத்து! திமுகவின் புதிய வியூகம்.. தவெக வெற்றிக்குப் பின்னால் நடந்தது என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. ஜெயித்துவிட்டது. ஆனால், ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் ஐந்து சுற்று வரை அ.தி.மு.க.வே முன்னிலையில் இருந்தது. மூலனூர் ஒன்றியத்தில் தி.மு.க.வே லீடிங் வாங்கி இருக்கிறது. முதல்வர் விஜய் தொகுதி முழுக்க ரோடு ஷோ நடத்தியும் லீடிங் பத்தாயிரம் கூட தாண்டாதது முதல்வர் விஜய்யின் பிம்பத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

இதுகுறித்து தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த மூத்த அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம். “தாராபுரம் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை திமு.க. அதிமுக, தவெ.க. ஆகிய மூன்று கட்சிகளின் உள்ளூர், வெளியூர் நிர்வாகிகள் பிரித்துக்கொண்டு, அங்கேயே வீடு பிடித்து தங்கி வாக்கு சேகரித்தனர்.

இதேபோல, தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சக்கரபாணி, செந்தில்பாலாஜி ஆகியோர் முறையே மூலனூர் ஒன்றியத்திலும், குண்டடம் ஒன்றியத்திலும் வாக்குச் சாவடிகளின் பொறுப்புகளை ஏற்றிருந்தார்கள். த.வெ.க. தேர்தல் பணிக்குழுவைச் சேர்ந்த அ.தி.மு.க. மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலனூரில் உள்ள வாக்குச் சாவடிகளின் பொறுப்புகளை ஏற்றிருந்தார்.

தொகுதி முழுவதும் மூன்று கட்சியினரும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஆதரவு கேட்டுவந்த நிலையில், தவெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை பல கிராமங்களில் பிரசாரம் செய்யவே விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த வீடியோக்கள் வைரலாகி, த.வெ.சு.விற்கு பின்னடைவை.

ஏற்படுத்தியது. இதைக் கண்டு அதிர்ச்சியான அமைச்சர் செங்கோட்டையன் தரப்பு உடனடியாக களமிறங்கியது.

விலைக்கு வாங்கப்பட்ட இலை மாஜிக்கள்!

மூலனூர் நகரச் செயலாளர் வெற்றிவேல், கடந்த சட்டமன்றத் தேர்தல் தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர், அம்மா பேரவை முத்து வெங்கடேஷ், முன்னாள் மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன் உட்பட ஒவ்வொரு ஊரிலும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை இரவோடு இரவாக பேச்சுவார்த்தை நடத்தி ஆளுங்கட்சியில் இணைத்தனர். இந்த திடீர் ஏற்பாட்டால் பல கிராமங்களில் சத்தியபாமாவிற்கு இருந்த எதிர்ப்பு படிப்படியாக குறைந்தது.

இதனால் அதிமுகவிற்கு தேர்தல் பணி செய்யக்கூடிய உள்ளூர் நிர்வாகிகளும் குறையத் தொடங்கினர். ஆனாலும், ‘ராஜினாமா செய்து ஏமாற்றிவிட்டாரே என சத்தியபாமா மீது நடுநிலையாளர்களின் கோபம் குறையவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்ட தி.மு.க., ‘கடந்த ஆட்சியில் நாங்கள் செய்த சாதனைகளை, அதன் பெயரை மட்டும் மாற்றிவிட்டு தவெக பில்டப் கொடுக்கிறது’ என பிரசாரத்தை முன்னெடுத்தது. அதோடு கூட்டணிக் கட்சி இல்லாமல் தி.மு.க. தனியாகவே இத்தேர்தலை சந்தித்தது.

தி.மு.க. புது வியூகம்!

தொகுதியில் உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர்கள், அருந்ததியர்கள் 75 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது வழக்கம். அதை திமுகவினர் உடைக்கத் தொடங்கினர். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சக்கரபாணி, வெள்ளக்கோயில் சாமிநாதன், ஈரோடு முத்துசாமி, வேடசந்தூர் எம்.எல்.ஏ. வீராசாமிநாதன் ஆகியோர் ஒவ்வொரு கிராமத்திலும் கொங்கு வேளானக் கவுண்டர் சமூக முக்கிய பிரமுகர்களை சந்தித்து ‘இம்முறை திமுகவுக்கு வாக்களியுங்கள்’ என கேட்க ஆரம்பித்தார்கள். இவர்களின் வியூகம் ஒர்க் அவுட் ஆனதால் தான் எப்போதும் அதிமுக அதிக ஓட்டு வாங்கும் மூலனூர் ஒன்றியத்தில் தி.மு.க. 1,330 ஓட்டுகள் லீடிங் பெற்றுள்ளது.

வேட்புமனு செய்த சில நாட்களில், தாராபுரம் தொகுதியில் உள்ள த.வெ.க ஆரம்பகால நிர்வாகிகள், மூலனூரில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதாவது, ‘அ.தி.மு.கவில் இருந்து வருபவர்கள் பணபலத்துடன் வருகிறார்கள். கட்சிக்கு வந்து சில நாட்களிலேயே தலைமையிடம் நெருங்கிவிடுகிறார்கள். நிலைமை இப்படியே போனால் கட்சிக்காக போஸ்டர் ஒட்டி உழைத்த நமது உழைப்பு வீணாகிவிடும். அதனால் சத்தியபாமா வெற்றி பெற்றால், பணபலம் பொருந்திய அதி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் எளிதில் சீட் வாங்கி விடுவார்கள்.

சத்தியபாமா தோற்றால் மட்டுமே நமக்கு இனி வாழ்வு. மக்கள் விஜய்க்காக மட்டுமே ஓட்டு போட்டு வெற்றிபெற வைக்கிறார்கள். அதை தெரிந்துகொண்டு நமது கட்சிக்கு வரும் அ.தி.மு.க.வினரை தடுக்க வேண்டும். அதற்கு சத்தியபாமா தோற்க வேண்டும். இதற்காக நாம் மறைமுகமாக வேலைசெய்ய வேண்டும்’ என முடிவு செய்தார்கள்.

இந்தக் கூட்டம் பற்றிய விவரத்தை முதல்வருக்கு பாஸ் செய்தது உளவுத்துறை. ‘எப்படியாவது தாராபுரத்தில் ஜெயிக்க வேண்டும்’ என முடிவு செய்த முதல்வர். குண்டடம் முதல் தாராபுரம் வரை, தாராபுரம் முதல் மூலனூர் வரை சுமார் 60 கிலோ மீட்டர் ரோடு ஷோ நடத்தினார். ‘சத்தியபாமாவிற்கு எதிரான ஓட்டுகளோடு சேர்த்து, நமது கட்சி ஓட்டும் நமக்கு விழும்’ என அதிமுகவினர் கணக்கு போட்டிருந்தார்கள்.

தி.மு.க. ஓட்டுகளுடன் சேர்த்து சத்தியபாமா எதிர்ப்பு ஓட்டு, ஓட்டுகளும் நமக்கு விழும். திமுகவினர் கணக்கு போட்டிருந்தார்கள். எந்தக் கணக்கும் போடாமல், ‘முதல்வர் ரோடு ஷோ நடக்கிறது. எனவே ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துவிடுவோம்’ என நம்பிக்கையோடு ஆளுங்கட்சியினர் இருந்தார்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், பட்டிகளில் மனிதர்களை அடைக்காமல், ஓரளவு ஜனநாயக முறையில் நடந்த இந்த இடைத்தேர்தலில், எப்போதும் அதிமுகவுக்கு விழுந்துகொண்டிருந்த அருந்ததியர் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு கை கொடுத்ததால் அப்பாடா என்று 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தாராபுரத்தில் ஜெயித்திருக்கிறார் சத்தியபாமா.

அ.தி.மு.க. ஓட்டுகள் தி.மு.க.வுக்கு விழுந்ததால், தி.மு.க. இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் பலமாக இருந்த அதிமுக இந்த தேர்தல் மூலம் கரைந்துகொண்டிருக்கிறது” என்றார் விரிவாக ஆக இது அதி.மு.கவுக்குதான் ஆபத்து!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here