back to top
17.3 C
London
Thursday, July 2, 2026
No menu items!
Homeஅரசியல்விஜய் அரசின் முதல் 50 நாட்கள்: வியப்புகளும் விமர்சனங்களும் கலந்த அரசியல் பயணம்! - Kumudam

விஜய் அரசின் முதல் 50 நாட்கள்: வியப்புகளும் விமர்சனங்களும் கலந்த அரசியல் பயணம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



திராவிட ஆட்சிக்கு மாற்று!

75 ஆண்டுக் கால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பம்: திராவிடக் கட்சிகளுக்கு மாற்று உண்டு என்று விஜய் இந்தத் தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்தார். வாக்குகளை இங்கே பணம் கொடுத்து வாங்கிவிடலாம் என்பது போன்ற பிம்ப நம்பிக்கைகளை உடைத்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

உஷாரான விஜய்!

தேர்தல் முடிவுகளின்படி பெரும்பான்மைக்கான எண் ணிக்கை குறைவு என்றாலும், அவரது அரசியல் காய் நகர்த்தல் உண்மையில் சூப்பர் ஹிட் திரைக்கதை என்பதுதான் உண்மை ஆட்சியில் பங்கு’ என்ற அஸ்திரம் அப்போது பலமாகவே வேலை செய்ய ஆரம்பித்தது! ‘நான் ரெடி’ என்று முதலில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்தது காங்கிரஸ் கட்சி அப்போதே அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்கால அரசியல் நலன் சார்ந்து இரண்டு கம்யூனிஸ்ட்கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்! நாங்கள் நிரந்தர திமுக கூட்டணிப் பங்காளர் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றவர்களைவிட உற்சாகமாகவே புதிய ஆட்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. எல்லாம் விஜய் செய்த மாயம்!

முதல்வர் ஆனதும்…

முதல்வரானதும் ‘குட்டீஸ் களுக்கு இந்த மாமாவின் தேங்க்ஸ்’ என்று சொல்லிக் குட்டீஸ்களின் நிரந்தர வாக்கு வங்கி தான்தான் என்பதை உறுதிப்படுத்தினார். கூடவே, சென்ற தி.மு.க. ஆட்சியில் நிறையக் குளறுபடி, சுஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள், வாக்குறுதிகளை நிறைவேற்ற எனக்குக் கொஞ்சம் டைம் தாருங்கள் என்ற கோரிக்கையும் வைத்த அவர், அடுத்த திடீர் க்ளைமாக்ஸாக எல்லாத் தலைவர்களையும் தேடிப் போய்
பார்த்து, அவர்கள் வாழ்த்தைப் பெற்றார். ஆனால், எடப்பாடியைச் சந்திக்காமல் தவிர்த்துவிட்டு, வேலுமணி தரப்பைச் சந்தித்து சால்வை அணிவித்தார். அப்போதே நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்பது உறுதியானது.

விஜய்யின் கொள்கைகள்

பெரியாரை ஏற்கிறேன். ஆனால், அவரது கடவுள் எதிர்ப்புக் கொள்கையை நான் ஏற்கவில்லை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பதைச் சட்டசபையிலேயே தெளிவுபடுத்தினார். நெற்றியில் பொட்டு, மூகாம்பிகை கோயில் பிரார்த்தனை இவை எல்லாமே நானும் ஒரு சனாதன பக்தன்தான்’ என்பதை இந்துக்களுக்குச் சொல்லாமல் சொல்லி, ஜோசப் என்பது ஒரு பெயர், அவ்வளவுதான் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார். மத்திய-மாநில அரசு உறவைப் பொறுத்தவரை, மத்திய அரசுடன் தேவையற்ற மோதல்கள் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தியவர், இரு மொழிக் கொள்கை, நீட் எதிர்ப்பு போன்றவற்றில் திராவிடக் கட்சிகளுக்கு எந்த வகையிலும் தன் எதிர்ப்பு குறைந்தது அல்ல என்பதை உறுதிபடுத்தினார்.

ஆளுநர் எங்கள் நண்பர்…

சட்டசபையில் தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் என்று வளைந்து கொடுத்து, ஆளுநர் முழு உரையையும் படிக்க வைத்தது அவரது இன்னொரு சாணக்கியத்தனம் தேசியக் கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஆளுநரையே சொல்ல வைத்தது. தமிழகத்துக்குத் தரவேண்டிய நியாயமான நிதிப் பகிர்வைப் பாரபட்சமின்றித் தரவேண்டும் என்பது, சென்ற ஆட்சியில் கனிம வளத்துறையில் முறைகேடு என்று சொல்ல வைத்தது. மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மாநில அரசின் உரிமை என்று ஆளுநர் பேசியது எல்லாமே விஜய் யோசனைப்படி எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்தான். ஒருவரி, ஓர் எழுத்து மாறாமல் அதை உற்சாகமாகவே பேசியிருக்கிறார், ஆளுநர் அர்லேகர்.

அடுத்தடுத்துத் தலைவலிகள்!

தலைவர் எதிர்க்கட்சித் உதயநிதி ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை நிறைய பேசினார். புதிய அரசு அமைந்ததுமே பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஆகியவை அதிகமாகிவிட்டன; முதல்வர் பேசவே மாட்டேன் என்கிறார் என்றெல்லாம் கடுமை யாகத் தாக்கிப் பேசினார், எதிர்க் கட்சித் தலைவர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விஜய் பேசியபோது. இவரை நாமே தேவையில்லாமல் உசுப்பி விட்டோமோ என்று திமுக தரப்பு வருத்தப்படும் அளவுக்கு விஜய்யின் பேச்சு இருந்தது.

“பேசலை பேசலைன்னு சொல்றீங்க… ஒரு அஞ்சு நிமிஷம் கொளத்தூரில் நான் பேசியதற்கே என்ன ஆனது என்று தெரியும். சமூக நீதி எல்லாம் பேசினீங்க. ஆனால், எட்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள், அண்ணன் தங்கைகளுக்கு அமைச்சர் பதவி தந்தது நாங்கதான், நீங்க இல்லை” என்று உறுமிய விஜய் ‘டாஸ்மாக் வழியே பார்ட்டி ஃபண்ட் வருவ தாகச் சொல்லி, தி.மு.க-வை அவசரமாக வெளிநடப்புச் செய்ய வைத்தார். சோபா மாடல் அரசு என்று சொன்னதற்கு மறைமுகமாக ஸ்டாலின் குடும்பத்தைப் போட்டுத் தாக்கியதும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்தான்!

கை கொடுக்கும் சபாநாயகர்

அதிமுக, திமு.க. இரண்டும் சட்டசபை நிகழ்வுகள் நிச்சயம் நேரலை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதைச் செயலுக்குக் கொண்டு வந்தது தமிழக வெற்றிக் கழகம்தான். அதே சமயம் பேரவைத் தலைவர் புதுசு என்பதை நிரூபிப்பதுபோல் சில நிகழ்வுகள் அரங்கேறின. உதாரணமாக, இரண்டாம் நாள் எதிர்க்கட்சித் தலைவர் உரைக்குப் பிறகு, ‘இத்துடன் சட்டசபை முடிகிறது. நாளைக் காலை கூட்டம் என்று சொல்லி முடித்த பிறகு, அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து எதிர்க்கட்சித் தலைவரையும் தி.மு.க-வையும் விமர்சனம் செய்து உரை நிகழ்த்தினார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போலவே ‘ஃபினிஷ்’ என்று கையால் சைகை செய்தது, ‘உங்க அப்பாவைத் தேடறேன்’ என்று குட்டிக் கதை சொன்னது. இது அனைத்துக்குமே சபாநாயகரின் உற்சாகமான அனுமதி ஓகே ஆனது!

மொத்தத்தில் விஜய் அரசின் முதல் ஐம்பது நாள் ஆட்சி வியப்புகளும் விமர்சனங்களும் கலந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. இனி என்னாகும் என்பதில்தான் அவருடைய அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here