Home அரசியல் மழை பெய்யுது..துபாய் பறந்த உதய் மீது ஒரு கண்…ரகசிய ஆபரேஷனில் தவெக உளவுத்துறை? – Kumudam

மழை பெய்யுது..துபாய் பறந்த உதய் மீது ஒரு கண்…ரகசிய ஆபரேஷனில் தவெக உளவுத்துறை? – Kumudam

0


தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையைச் சமாளிக்க முடியாமல் தவெக தலைமையும் ஒருபுறம் திணறி வரும் நிலையில், ஆங்காங்கே அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

இத்தகைய முக்கியமான காலகட்டத்தில் உதயநிதி வெளிநாடு சென்றிருப்பது, அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்தப் பயணத்தின்போது உதயநிதி ஒரு முக்கியமான நபரைச் சந்தித்ததாகத் தவெக அரசும், தாமரை தரப்பும் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன சொல்கிறீர்கள்? அப்படி யாரைத்தான் உதயநிதி சந்தித்தார்? பார்ப்போமா?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் துறையில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்குப் பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிக்கினர்.

அதைத் தொடர்ந்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படியிருக்க, தொடர்ந்து பெய்து வரும் மழையால் உதயநிதியின் தொகுதியான சேப்பாக்கம் உட்படச் சென்னை முழுவதும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுபோன்ற காலங்களில் களத்தில் இறங்கி வேலை செய்வதற்காக உதயநிதியையே கட்சித் தலைமை முன்னிறுத்தும். இப்படிப்பட்ட சூழலில், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அவர் திடீரென துபாய் பயணம் மேற்கொண்டார். இது ஒரு சர்ச்சையாகப் பேசப்பட்ட நிலையில், மற்றொரு சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.

அவர் பயணம் செய்த விமானத்தில், அவரது நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரும் பயணம் செய்தது எதிர்த் தரப்பினரின் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

அதுவும், ஆகாஷ் மீது அமலாக்கத்துறையின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், “இருவரும் ஒரே விமானத்தில் ஏன் பயணம் செய்தார்கள்? துபாயில் யாரைச் சந்தித்தார்கள்?” என்ற கேள்விகளுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய உளவுத்துறையும் தவெக அரசின் உளவுத்துறையும் ரகசிய அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version