back to top
10.1 C
London
Tuesday, October 20, 2026
No menu items!
Homeசினிமாஅனிருத் - காவ்யா கல்யாணம்... வைரலாகும் ஜோனிடாவின் Insta Story..! - Kumudam

அனிருத் – காவ்யா கல்யாணம்… வைரலாகும் ஜோனிடாவின் Insta Story..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெளியான ‘Why This Kolaveri Di’ பாடல் உலக அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.

அனிருத் – ஜோனிடா காதலா?

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ உள்ளிட்ட பாடல்களைப் பாடிய ஜோனிடா காந்திக்கும், அனிருத்துக்கும் இடையே காதல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அனிருத் இசையமைக்கும் படங்களில் ஜோனிடா தொடர்ந்து பாடுவதும் இந்தப் பேச்சுகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

எனினும், இருவரும் தங்களுக்குள் காதல் இருப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதனால், இவர்களது உறவு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவே இருந்து வருகின்றன.

அனிருத் – காவ்யா கல்யாணமா?

இந்தச் சூழலில், அனிருத் – காவ்யா கல்யாணம் குறித்த தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. இதற்கிடையே, ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் Emma நாவலில் இடம்பெறும், “If I loved you less, I might be able to talk about it more” என்ற வாசகத்தைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வாசகத்தின் பொருள், “உன் மீது எனக்குள்ள காதல் குறைவாக இருந்தால், அதைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேச முடிந்திருக்கும்” என்பதாகும்.

காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த வாசகத்தை ஜோனிடா பகிர்ந்திருப்பது, அனிருத் – ஜோனிடா காதல் குறித்த பழைய பேச்சுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. இதனால், இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுவிட்டதா அல்லது இந்தப் பதிவு வேறு ஏதேனும் காரணத்திற்காகப் பகிரப்பட்டதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், ஜோனிடாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அனிருத்தைக் குறிப்பிட்டுத்தான் பகிரப்பட்டது என்பதற்கோ, இருவரும் காதலித்து வந்தார்கள் அல்லது தற்போது பிரிந்துவிட்டார்கள் என்பதற்கோ உறுதியான தகவல் வெளியாகவில்லை.

வைரலாகும் ஸ்டோரி… என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?

அனிருத்தின் திருமணம் குறித்த தகவல்களும், ஜோனிடாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியும் ஒரே நேரத்தில் பேசுபொருளாகியுள்ளதால், சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், அனிருத் – காவ்யா திருமணம் குறித்த தகவல்களும், ஜோனிடாவின் பதிவுக்குப் பின்னால் இருக்கும் காரணமும் சம்பந்தப்பட்டவர்களால் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது வெளியாகும் தகவல்களை உறுதியான செய்தியாக எடுத்துக்கொள்ள முடியாது.

அனிருத், ஜோனிடா இருவரில் யாராவது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here