back to top
11.7 C
London
Tuesday, October 20, 2026
No menu items!
Homeசினிமாரஜினியை முந்த நினைத்த விஜய்...‘ரூட்’ போட்ட புது பிளான்...ஜெயிலர் 2 சொல்லும் மெசேஜ் என்ன? -...

ரஜினியை முந்த நினைத்த விஜய்…‘ரூட்’ போட்ட புது பிளான்…ஜெயிலர் 2 சொல்லும் மெசேஜ் என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


‘ஜெயிலர்-2’ அதிரிபுதிரி ஹிட் அடித்து தமிழ் சினிமாவின் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் எனும் கனவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையே… ஒரு காலத்தில், தான் அமர ஆசைப்பட்ட இடத்தில் இன்று விஜய் கிரீடம் ஏந்தி அமர்ந்திருப்பதைக் கண்டு, முகம் சிறுத்த ரஜினி, ‘ஜெயிலர்-2’ மெசேஜ் மூலம் தனது காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கிறார்.

இதன் விளைவாக, இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், விஜய்யை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக ரஜினியைத் தூக்கிப்பிடித்து மறைமுகமாக விஜய்யை டேமேஜ் செய்துகொண்டிருக்க அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது கோலிவுட்!

இதுகுறித்து, சினிமா துறையை நன்கறிந்த அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம். ‘தமிழ் சினிமாவில் ரஜினி – கமல், விஜய் அஜித் என்றிருந்த ஸ்டார் வார் ஒரு கட்டத்தில், ரஜினி VS விஜய் என தடம் மாறியது. சொல்லப்போனால், எந்த ரஜினியின் பட வசனங்களை தன் தந்தையிடம் நடித்து காண்பித்து, தனது சினிமா ஆசையை விஜய் தன் தந்தையிடம் வெளிப்படுத்தினாரோ, அதே ரஜினியை விஜய் முந்த நினைத்தார். ‘அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா’ என ஆடிப் பாடிய விஜய்க்கு, அண்ணாமலையாகவே மாறும் ஆசை வந்தது.

ஒரு கட்டத்தில், தனது கடின உழைப்பால் அதிக சம்பளம், ரசிகர்களின் மாஸ், கமர்ஷியல் ஹிட் படங்களின் பிசினஸ் என ரஜினிக்கு நிகரான இடத்தைப் பிடிக்கவும் செய்தார் விஜய்.

இதனைத் தொடர்ந்து, 2020 காலகட்டத்தில், யார் பிசினஸ் ரீதியாக பெரிய ஹீரோ? என்ற வாதம் விஜய் ரஜினி ரசிகர்களிடையே உருவானது. இது தொடர்பான விவாதங்களும் மீம்ஸுகளும் சமூகவலைதளங்களில் ஹாட்டாக தெறிக்கத் தொடங்கின. இப்படியான சூழலில்தான். 2022ல் நடந்த ‘வாரிசு’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், சரத்குமார் உள்ளிட்டோர் விஜய்யை நேருக்கு நேராகவே சூப்பர் ஸ்டார் விஜய் எனச் சொல்லி அவரை புளகாங்கிதம் அடைய வைத்தனர். அதேசமயம், அந்த விழாவின் இறுதியில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார்’ அடைமொழியை மறுத்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்படி பேசவில்லை.

இவையெல்லாம். ரஜினி ரசிகர்களை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியது. இந்த சூப்பர் ஸ்டார் கோஷம் பின்னணியில் விஜய்யின் ஆஸ்தான பி.ஆர் டீமான ‘ரூட்’ நிறுவனம் தான் செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக விஜய் தரப்பின் டைரக்ட் அட்டாக் ரஜினி தரப்புக்கு கௌரவப் பிரச்னையானது. ஒரு சீனியருக்கான மரியாதையைக்கூட கொடுக்காமல் நடந்துகொள்கிறார்களே’ என வருத்தத்தில் இருந்த ரஜினி, அந்த ஆதங்கத்தை 2023ல் நடந்த ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘காக்கா – கழுகு’ கதை சொல்லி வெளிப்படுத்தினார். இது இரு தரப்பு ரசிகர்கள் இடையே, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே, அதற்கு எதிர்வினையாக, ‘லியோ’ பட வெற்றி விழாவில் பேசிய விஜய், ஒரு குட்டி ஸ்டோரியோடு சேர்த்து ரஜினிக்கான மறைமுக பதிலடியும் கொடுத்திருந்தார்.

இப்படியாக மோதல் நீடித்துவந்த நிலையில் தான், விஜய்யின் அரசியல் பயணம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. அந்த சூழலில், விஜய் தரப்பிலிருந்து ஆதவ் அர்ஜுனா, ‘தி.மு.க கொடுத்த மிரட்டலுக்கு பயந்துதான் ரஜினி அரசியலுக்கு வராமல் பின்வாங்கினார். விஜய் பயப்படாமல் அரசியலுக்கு வந்தார் என கொளுத்திப்போட ரஜினி ரசிகர்கள் வெகுவாக கொந்தளித்துவிட்டார்கள். அப்போது, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினி, காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ என தத்துவார்த்தரீதியாக பதிலடி கொடுத்தார். காலம் தனக்குக் கொடுக்காத அரசியல் வெற்றியை -விஜய்க்கும் கொடுக்காது என்ற அர்த்தத்திலேயே – ரஜினி அப்படிச் சொல்லியதாகத் தெரிகிறது. ஆனால், நடந்ததோ வேறு. தேர்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வர் ஆனார்.

முதல்வரான பின்பு, நேரடி அரசியல் எதிரியான மு.கஸ்டாலினையே சந்தித்த விஜய், தன் சினிமா வழிகாட்டியான ரஜினியை சந்தித்து ஆசி பெற முன்வரவில்லை. இது ரஜினி ரசிகர்களை சங்கடப்படுத்தியது. அதேசமயம், ஒட்டுமொத்த திரையுலகமே விஜய்யை சந்தித்து வாழ்த்தும்போது, ரஜினியிடமிருந்து ஒரு விரிவான வாழ்த்துச் செய்திகூட வரவில்லையே என விஜய் ஆதரவாளர்கள் புழுங்கத் தொடங்கினர். இதற்கிடையே, தேர்தல் முடிவு வெளியாகி 5 விஜய் ஆட்சியமைக்க தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில், ஸ்டாலினை சந்தித்து ரஜினி பேசியது 5 சலசலப்பானது. அதாவது, ‘விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக திமுக அதிமுக இடையே ஒரு ரகசியக் கூட்டணியை உருவாக்க 5 தூது சென்றார் ரஜினி’ என்று விஜய் தரப்பு-கிளப்பிவிட்டது.

இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்க, செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘இரு பெரும் திராவிடக் கட்சிகளை மீறி த.வெ.க வெற்றி பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல,’ என விஜய்யை வெளிப்படையாக வாழ்த்தியதுடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் களமிறங்கியிருந்தால் கண்டிப்பாக ஆட்சி அமைத்திருப்பேன்’ என்று தனது மனக்குமுறலையும் கொட்டியிருந்தார்.

இப்படியான சூழலில்தான் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸுக்கு ரெடியானது. அந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள், ‘ஆடியோ லாஞ்ச் பர்மிஷனுக்கு எங்கக்கிட்டதானே வந்தாகணும். என கெத்து காட்டத் தொடங்கினார்கள். கூடவே. படத்தை தயாரிப்பது சன்பிக்சர்ஸ் என்பதால், ‘ஒரே கல்லுல ரெண்டு மாங்கா’ என்ற மனநிலையில்தான் விஜய் ஆதரவாளர்கள் இருந்தனர். ஆனால், இதை கௌரவப் பிரச்னையாகப் பார்த்த ரஜினி, ஆடியோ வெளியீட்டை வழக்கமான பாணியில் பிரமாண்டமாக நடத்தாமல், ரசிகர்களே இல்லாமல் சிம்பிளாக ஒரு அரங்குக்குள் வைத்து முடித்துக்கொண்டார்.

எனினும், ஜெயிலர்2 படத்தை ஓடவிடக்கூடாது என விஜய் ரசிகர்கள் தயாரானார்கள். இதற்காகவே ‘ரூட்’ தரப்பிலிருந்து பிரத்யேக டூல் கிட்டுகளும் வடிவமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்ப தயாரானது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு சினிமா துறையில் தலையிடுவது நெகடிவ் இமேஜை தந்துவிடும் என்று விஜய் தரப்பிலிருந்தே முட்டுக்கட்டைப் போடப்பட, அந்த திட்டம் கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. 

அதேசமயம் தீவிர விஜய் ரசிகர்கள், ‘ஜெயிலர் 2 படம் எப்படி இருந்தாலும் கலாய்த்து தள்ள ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் படமோ, இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, வெளியான முதல் ஷோவிலேயே சூப்பர் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொட்டது.ரஜினியை கொண்டாடும் எதிர்க்கட்சிகள் இந்த சூழலில், ஜெயிலர்2’ வெற்றி, அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. அதாவது, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ பாணியில், விஜய்க்கு எதிராகக் களமாடிவரும் தி.மு.க., அதிமுக, நாதக போன்ற கட்சிகள், ரஜினியைத் தூக்கிவைத்துக் கொண்டாடத் தொடங்கினார்கள்.

ஜெயிலர் ரிலீஸான காலகட்டத்தில் ரஜினியைக் கடுமையாக விமர்சித்திருந்த நாதக கொ.ப.செ சாட்டை துரைமுருகன், ‘ஜெயிலர் 2 படத்தை வானளாவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார். கன்னடர் ஒருவர் தமிழர்களை ஆள நினைக்கக் கூடாது’ என்று ரஜினியை கடுமையாக எதிர்த்த சீமான், இப்படத்தை அறிக்கைவிட்டு பாராட்டியிருக்கிறார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், தலைவர் நிரந்தரம்’ என்று ஜெயிலர் 2 படத்துக்கு ட்விட் போட்டு வாழ்த்தியிருக்கிறார். தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட சில இடங்களில் தி.மு.கவினர் ஜெயிலர்2′ படத்தை வாழ்த்தி பேனர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இப்படியான ஓபன் ரஜினி ஆதரவு ஸ்டேட்மென்ட்கள், த.வெ.கவுக்கு எதிரான வியூகமாகத்தான் பார்க்கப்படுகிறது. விஜய்க்கு எதிர்வினையாற்ற, ரஜினியை ஒரு கருவியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அதேசமயம் இதற்கு த.வெ.க தரப்பும், விஜய் ரசிகர்களும், ‘விஜய்யின் வெற்றி இவங்கள எந்த அளவுக்கு பாதிச்சிருக்கு பாருங்க’, ‘கூத்தாடி அரசியல் பண்ணக்கூடாதுனு சொன்னகட்சிகள் இன்னைக்கு இன்னொரு கூத்தாடியை ஆதரிச்சுக்கிட்டு இருக்காங்க’ என காட்டமான ரியாக்ஷன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெயிலர், விஜய்க்கு சொல்லும் மெசேஜ் என்ன?

இவையெல்லாம் வெளிப்புறம் என்றால், ‘ஜெயிலர் 2 படத்திலும் விஜய்க்கு ரஜினியின் மறைமுக மெசேஜ் இல்லாமல் இல்லை. ஏற்கெனவே ‘ஜெயிலர்’ படத்தில் ‘பேரைத் தூக்க நாலுபேரு, பட்டத்தைப் பறிக்க நூறு பேரு என்று விஜய்யை சீண்டியது போதாதென்று, தற்போது ‘ஜெயிலர்2’ கிளைமாக்ஸில், 50 வருஷமா நிறைய பேர், நிறைய விதமா என்ன முடிக்கனும்னு ட்ரை பண்ணாங்க. ஆனா என்று சொல்லி நிறுத்தும் ரஜினி, தனக்கேயுரிய டிரேட் மார்க் ஸ்டைலான சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பதுபோல் ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது. ‘நான் அதே மாஸோடு களத்தில் நிற்கிறேன், என்னை, எப்போதும், யாராலும் எதுவும் செய்யமுடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

இதுபோதாதென்று ரஜினி ரசிகர்களும், 51 வருஷத்துல.. 12 பிரதமரைப் பாத்தாச்சு.. 8 முதல்வரைப் பாத்தாச்சு. ஆனா, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். தலைவர் நிரந்தரம் என போஸ்டர் ஒட்டி, விஜய்யை தங்கள் பாணியில் சீண்டியிருக்கிறார்கள். சமூகவலைதளங்களிலும், ஆட்சி மாறுனா சி.எம் பதவி போய்டும். ஆனா, சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அப்படி இல்லை’ என்றும் அரசியல் என்பது… ரஜினி, தானாக வேண்டாம் என ஒதுக்கிய ஒன்று, அவர் நினைத்திருந்தால் எப்போதோ தமிழ்நாட்டின் முதல்வர் ஆகியிருப்பார். இப்போதும் அவர் ஒரு வார்த்தை சொன்னால், பதவிகள் அவரை தேடிவரும். ஆனால் ரஜினி அதை விரும்பவில்லை. அவ்வளவுதான்’ என்பதே ‘ஜெயிலர் 2 மூலம் ரஜினி ரசிகர்கள் மார்தட்டி சொல்லும் பொலிடிகல் மெசேஜ் என சொல்லி முடித்தார்.

இந்த மோதல் இப்போதைக்கு முடியாது போலயே!

(அ.கண்ணதாசன், ம.உமர் முக்தார்)



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here