back to top
14.1 C
London
Thursday, October 15, 2026
No menu items!
Homeஅரசியல்"வாந்தி எடுக்கும் கலெக்க்ஷன் குமார் !" - அமைச்சர் நிர்மல் குமாரை வறுத்தெடுக்கும் பரந்தாமன் !...

“வாந்தி எடுக்கும் கலெக்க்ஷன் குமார் !” – அமைச்சர் நிர்மல் குமாரை வறுத்தெடுக்கும் பரந்தாமன் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை தொடர்பாகத் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார். பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு: பொதுமக்கள் பாதிப்பு!

தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பரந்தாமன் குற்றம்சாட்டினார். சந்தைகளில் பொருட்களை வாங்கச் செல்லும் சாமானிய மக்கள் விலை உயர்வால் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, முன்பு காய்கறிகள் வாங்கும்போது இலவசமாக வழங்கப்பட்ட கருவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றுக்குக்கூட தற்போது பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கோழிக்கறியின் விலை கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

விலைவாசி உயர்வு இல்லை என்றுஉணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தரப்பில் தெரிவிக்கப்படுவதை விமர்சித்த அவர், ” வெங்கடராமன் அவரு அரிசி வாங்கி சோறுதான் திங்குறாரான்னு தெரியல.” என்றும், ” அவர் ஆடிட்டரா இருந்தவர் அவருக்கு என்ன தெரியும் பாவம் கஷ்டம். கடையில போய் பைய பிடிச்சு அரிசி வாங்கி இருந்தார்னா தெரியும்” என்றும் விமர்சித்துள்ளார். சந்தை நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்தால்தான் மக்களின் உண்மையான நிலை தெரியவரும் என்றார்.

உணவுத்துறை அமைச்சருக்கு திறந்த சவால்!

விலைவாசி உயர்வு இல்லை என்று கூறும் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனுக்கு, பரந்தாமன் திறந்த சவால் விடுத்தார். இருவரும் நேரடியாக மயிலாப்பூர் அல்லது சிந்தாதிரிப்பேட்டை சந்தைக்குச் சென்று அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு சந்தைக்குச் சென்று பொருட்களின் விலையை ஆய்வு செய்வதன் மூலம் விலைவாசி உயர்ந்துள்ளதா இல்லையா என்பதைப் பொதுமக்களே அறிந்துகொள்ள முடியும் என அவர் கூறினார். விலைவாசி உயர்வு இல்லை என்ற அரசின் கூற்றுக்கு மாறாக விலை அதிகரித்திருப்பதைத் தாம் நிரூபித்தால், அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியில் சிறப்புப் பொது விநியோகத் திட்டம்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் முந்தைய நடவடிக்கைகளையும் பரந்தாமன் நினைவுகூர்ந்தார். கடந்த 2007-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது, அப்போதைய திமுக அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டதாகவும், சில அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மூலம் குடும்பங்களின் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்தபோதும், அவற்றை மக்களுக்கு மலிவு விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசும் இதுபோன்ற திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், உணவுத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மின்சாரப் பற்றாக்குறை: அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாகக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை நிலவுவதாகக் குற்றம்சாட்டிய பரந்தாமன், தேவையான மின்சாரத்தைத் திட்டமிட்ட முறையில் கொள்முதல் செய்வதிலும், நீண்டகால மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும் , மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் ” நேற்று கூட நிருபரின் கேள்விக்கு பதிலளிக்க திராணியில்லாமல் பயந்து ஓடினார் . எப்படியென்றால் , எழுதிவைத்ததை பத்திரிகையின் கக்கிவிட்டு வாந்தி எடுத்திட்டு போகிறார் இந்த கலெக்க்ஷன் குமார் ” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

காற்றாலை மின்சாரம், நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட வழிகளில் கிடைக்கக்கூடிய மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டமிடல் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். மற்ற மாநிலங்கள் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் யூனிட்டுக்கு ரூ.37 வரை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

மின்சாரத் தேவை எவ்வளவு உள்ளது, பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க என்ன திட்டங்கள் உள்ளன என்பன குறித்து அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும்!

விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதலமைச்சர் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று பரந்தாமன் வலியுறுத்தினார்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அரசின் அடிப்படைக் கடமை எனக் குறிப்பிட்ட அவர், நிர்வாக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும், மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவதற்குப் பதிலாக, அரசு விளம்பரங்களிலும் சமூக வலைதளப் பதிவுகளில் ரீல்ஸ் போடுவதிலும் அதிக கவனம் செலுத்துவதாக அவர் விமர்சித்தார். பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மக்களின் பிரச்சினைகளுக்காகவே திமுக குரல் கொடுக்கிறது!

திமுக அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்லாமல், பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளை முன்வைப்பதற்காகவே குரல் கொடுப்பதாகப் பரந்தாமன் தெரிவித்தார். விலைவாசி உயர்வு, மின்சாரப் பற்றாக்குறை, அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நிலவும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள அமைச்சரவை மற்றும் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனைகளைப் பயன்படுத்தி, உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மொத்தத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தவெக அரசு நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் தனது செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here