back to top
17.3 C
London
Monday, October 12, 2026
No menu items!
Homeஅரசியல்“என்னை அவ்வளவு அசிங்கப்படுத்துச்சு!” - அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது கயல்விழி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! - Kumudam

“என்னை அவ்வளவு அசிங்கப்படுத்துச்சு!” – அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது கயல்விழி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தல் நேரத்து பேரம், பணப் புகார்கள் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அந்த வகையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக சுயேட்சை வேட்பாளர் கயல்விழியும், தவெக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் கணவரும் பேசும் ஆடியோ பதிவும் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், அந்த சுயேட்சை வேட்பாளர் கயல்விழி, அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமைச்சராகும் மரகதம் குமரவேல்..?

ஆடியோவில் பேசும் சுயேட்சை வேட்பாளர் கயல்விழி, ”உங்க மனைவிக்கு தான் சமூக நலத்துறை பொறுப்புதான் கொடுப்பாங்க. மினிஸ்டர் பொறுப்பு கன்பார்ம் ஆகிருக்கு. எனக்கு நல்லா தெரியும், ஏன்னா நான் உள்ளுக்குள்ளதான் இருக்கிறேன் சில விஷயங்கள்ல. அதனால எனக்கு நல்லா தெரியும். உங்க மனைவி ஒரே ஒரு கையெழுத்து போட்டா என் பையனுக்கு நீதி கிடைக்கும்” என்று மரகதம் குமரவேல் கணவரிடம் கூறுகிறார்.

கட்சி விட்டு கட்சி தாவி, தற்போது தான் மீண்டும் எம்.எல்.ஏ ஆகி இருக்கிறார் மரகதம் குமரவேல். இந்த நிலையில், அவர் தான் அடுத்த சமூகநலத்துறை அமைச்சர் என்று சுயேட்சை வேட்பாளரான கயல்விழி கூறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது பகீர் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது பகீர் குற்றச்சாட்டை சுயேட்சை வேட்பாளரான கயல்விழி முன்வைத்துள்ளார். அதில், தனது மகன் இறந்துவிட்டதாகவும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் உருக்கமாகப் பேசுகிறார்.

தனது பெற்றோர், கணவர், மகன் என அனைவரையும் இழந்துவிட்டதாகவும், யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் அந்த கயல்விழி வேதனையுடன் கூறுகிறார்.

தனக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் காவல்துறை அதிகாரியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியதாகவும், கயல்விழி குற்றம்சாட்டுகிறார். அதாவது, ”போலீஸ் அதிகாரிகிட்ட படுத்தா உனக்கு நீதி கிடைக்கும். படுக்கலனா நீதி கிடைக்காதுன்னு சொன்ன பொம்பள அவ(ஜெகதீஸ்வரி). எனக்கு அப்பா அம்மா இறந்துட்டாங்க. புருஷன் இறந்துட்டான். பிள்ளையும் இறந்துருச்சு. யாருமே இல்லாத அனாதியா வாழற வாழ்க்கை நானு. அதுக்காக என்ன அவ்வளவு அசிங்கப்படுத்துச்சு” என்று கயல்விழி கூறுகிறார்.

மேலும், ஜெகதீஸ்வரி முன்பு தன்னிடம் வேலை செய்தவர் என்றும், தற்போது அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறுகிறார். இதனால், கயல்விழிக்கும் ஜெகதீஸ்வரிக்கும் இடையே முன்பே பணித் தொடர்பு இருந்ததாக அவர் கூறுவது தெரியவருகிறது.

எனவே, அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இடம்பெறும் உரையாடலும், காவல்துறை அதிகாரி தொடர்பான குற்றச்சாட்டும் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்தடுத்து ஆடியோக்கள்..!

மதுராந்தகம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் கயல்விழி தொடர்பான பணப் பரிவர்த்தனைப் புகார் குறித்த ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், தற்போது மற்றொரு ஆடியோவும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு தாயாக கயல்விழி தனது மகனுக்கு நீதி கேட்பதாக வெளியாகியுள்ள இந்த ஆடியோவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா? அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும் இந்த விவகாரத்துக்கும் என்ன தொடர்பு? என்பது போக போகத் தெரியும்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here