Home சினிமா முத்துக்குமரன் – வஹிதா விவகாரம்: “கெரியரை ஏன் காலி பண்றீங்க?” – ஸ்ரீதேவா ஆவேசம்! –...

முத்துக்குமரன் – வஹிதா விவகாரம்: “கெரியரை ஏன் காலி பண்றீங்க?” – ஸ்ரீதேவா ஆவேசம்! – Kumudam

0


வஹிதா வெளியிட்டதாக கூறப்படும் வீடியோக்களில், முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தங்களது உறவு குறித்து பல்வேறு தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முத்துக்குமரனுடன் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே, முத்துக்குமரனுக்கு ஆதரவாகவும், இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கதாபாத்திரம் மூலம் பிரபலமான ஸ்ரீதேவா, முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள கருத்து கவனம்  பெற்றுள்ளது.

அதில், “இரண்டு பேரும் பழகியது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். முத்துக்குமரன் மீடியாவில் வேலை செய்கிறார் என்பதற்காக, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் கொண்டு வந்து அவருடைய கெரியரை ஏன் பாதிக்க வேண்டும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம் என்றும், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம் என்றும் ஸ்ரீதேவா தெரிவித்துள்ளார்.

“முத்துக்குமரனை போன் செய்து அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்திருக்கலாம். ஆனால், எதையும் செய்யாமல் நேரடியாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு அவருடைய கெரியரை பாதிப்பது ஏன்?” என்ற வகையில் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், முத்துக்குமரன் ஊடகத் துறையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தனக்கான இடத்தை பிடித்திருப்பார் என்றும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தம் என்றும் ஸ்ரீதேவா கேள்வி எழுப்பியுள்ளார்.

“உங்களுக்குள் நடந்த விஷயத்தை எதற்காக மீடியாவுக்குள் கொண்டு வர வேண்டும்? அவர் மீடியாவில் இருப்பதால் அவருடைய கெரியரை பாதிக்க வைக்க வேண்டுமா?” என்றும் அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரன் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், சமூக வலைதளங்களில் முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் தொடர்ந்து விவாதமாகி வருகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version