பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பு நிலவி வருகிறது. சமூக வலைதளப் பிரபலமான வஹிதா அக்தர், முத்துக்குமரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், நேற்று இருவரும் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்ட்டார். அந்த ஆடியோ இணையத்தில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியது.
இதன்தொடர்ச்சியாக வஹிதா அக்தர் , நேற்று நள்ளிரவும் , இன்று அதிகாலையும் இரண்டு பதிவுகளை பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் மேலும் தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
வீடியோக்களால் தொடங்கிய சர்ச்சை!
முத்துக்குமரனுடனான தனது சந்திப்பு, அவருடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் உறவு தொடர்பாக வஹிதா அக்தர் சில வீடியோக்களில் பேசியிருந்தார். இதற்கிடையே, முத்துக்குமரன் வஹிதாவிடம், “இந்த மூஞ்ச எனக்குப் பிடிச்சிருக்கு. பார்ட் டைம் பாய் ஃபிரெண்டாக இருக்க அப்ளிகேஷன் போட்டுள்ளேன். என்னைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறுவதுபோன்ற வீடியோவும் வெளியாகி கவனம் பெற்றது.
இந்தச் சூழலில், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில் இருவரும் தங்களுக்கிடையேயான உறவு மற்றும் அதற்கு என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து விவாதிப்பதுபோன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளது.
“இதுக்கு என்ன முடிவு சொல்லு…” – முத்துக்குமரன்
ஆடியோவில், “இதுக்கு என்ன முடிவு சொல்லு” என்று முத்துக்குமரன் கேட்பதாகக் கேட்கிறது. அதற்கு வஹிதா அக்தர், “நான் உங்களைக் கைது பண்ணிட்டாங்களான்னு கேட்கத்தான் கால் பண்ணேன். வெறும் ஃபிரெண்ட்ஷிப் தான் பெட் வரைக்கும் போகுமா? False hope கொடுத்திருக்கீங்க” என்று கூறுவதாக இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, “இதுக்கு என்ன closure, அதச் சொல்லு” என்று முத்துக்குமரன் கேட்பதாகவும், “மார்ச்சில் இருந்து பேசுறோம். நான் எப்பயாவது தப்பா நடந்திருக்கேனா? நான் எப்பயாவது misbehave பண்ணிருக்கேனா?” என்று அவர் கேள்வி எழுப்புவதாகவும் ஆடியோவில் உள்ளது.
“ஃபிரண்டோடதான் படுப்பீங்களா?” – வஹிதா கேள்வி!
தொடர்ந்து, “ஃபிரண்டோடதான் படுப்பீங்களா?” என்று வஹிதா கேட்பதாகக் கேட்கிறது. அதற்கு முத்துக்குமரன், “நீ அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போடுறதுக்காகவா எடுத்த?” என்று கேட்பதாகவும், “நீ பார்ட் டைம் பாய் ஃபிரெண்டா இருக்கச் சொல்லி சீரியஸாகக் கேட்டியா?” என்று வினவுவதாகவும் உரையாடலில் இடம்பெற்றுள்ளது.
மேலும், “நீ விளையாட்டுக்குக் கேட்டுட்டு இதோட விட்டுடலாம்… நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்று முத்துக்குமரன் கேட்பதாகவும், அதற்கிடையே வஹிதா மீண்டும், “ஃபிரண்ட் கூடதான் படுப்பீங்களா?” என்று கேள்வி எழுப்புவதாகவும் ஆடியோவில் கேட்கிறது.
வஹிதா பேகத்திற்கு எதிராக முத்துக்குமரன் புகார்!
முத்துக்குமரன் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வஹிதா பேகத்திற்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். இருவரும் நண்பர்களாக மட்டுமே இருந்ததாகவும், காதல் உறவு ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள்” – முத்துக்குமரன்
வஹிதா பேகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இரண்டு வீடியோக்களும், குரல் பதிவுகளும் எடிட் செய்யப்பட்டவை என முத்துக்குமரன் குற்றம்சாட்டியுள்ளார். வெட்டி ஒட்டப்பட்ட உரையாடல்கள் மூலம் தன்னைப் பற்றித் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
“காதலிக்கவில்லை; குற்றச்சாட்டுகள் பொய்!” – முத்துக்குமரன்
தன்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என மறுத்துள்ள முத்துக்குமரன், வஹிதா பேகத்தைத் தான் ஒருபோதும் காதலிக்கவில்லை என்றும், அக்டோபர் 8-ஆம் தேதி தொலைபேசியில் பேசியபோது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே அவர் இத்தகைய வீடியோக்களை வெளியிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
“நான் உன்னை மன்னிக்க தயார்” – வஹிதா அக்தர்
நேற்று முத்துக்குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வஹிதா பேகத்திற்கு எதிராகப் புகார் அளித்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார் ,
அதில், “நான் உன்னை மன்னிக்க தயார், அதனால் மன்னிப்பு கேள் ” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு டேக் லைனாக “இராவணன்” என்று வைத்திருந்தார். இது, முத்துக்குமரன் தொலைபேசி என்னை “இராவணன்” என்று பதிவு செய்திருந்த அந்த வார்த்தையையே வைத்துவிட்டார் .
“ஆதாரங்கள் எடுக்கமுடியுமா ? ” – வஹிதா அக்தர் தேடல் !
நேற்று நள்ளிரவு பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து , இன்று அதிகாலையே இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில்
” மாதவிடாய் காலத்திலும் உடலுறவு கொண்டிருந்தால், 5 நாட்களுக்குப் பிறகும் மருத்துவ ரீதியாக அதை நிரூபிக்க முடியுமா?
ஆம், மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டிருந்தாலும், 5 நாட்களுக்குப் பிறகும் மருத்துவ அல்லது தடயவியல் ஆதாரங்களைக் கண்டறிவது சாத்தியமாக இருக்கலாம். இருப்பினும், மருத்துவ ஆதாரங்களால் எதை நிரூபிக்க முடியும், எதை நிரூபிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
1. 5 நாட்களுக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனையால் உடலுறவை நிரூபிக்க முடியுமா?
DNA பரிசோதனை: மற்ற நபரின் உயிரியல் பொருட்கள் பொருத்தமான மாதிரியில் இன்னும் இருந்தால், தடயவியல் பரிசோதனை மூலம் அவரது DNA-வைக் கண்டறிய முடியும். இருப்பினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு பயனுள்ள ஆதாரங்கள் கிடைப்பது…”
என்பதை பதிவிட்டிருந்தார்.
முத்துகுமரனும் , நானும் உடலுறிவில் இருந்தோம் என்று வஹிதா அக்தர் கூறும் நிலையில் , ஆடியோ ஆதாரத்தில் முத்துக்குமரன் அதை மறுத்துவருவதும் , காவல் ஆணையரிடம் புகார் அளித்ததனால் வஹிதா ஏஐ மூலியமாக தனது சந்தேகத்தையும் , முத்துகுமாரனுக்கு எதிராக ஆதாரத்தை உருவாக்க முயல்கிறார் என்பதும் தெரிய வருகிறது . அந்த பதிவின் கீழ் யோசிப்பது போன்ற எமோஜி ஒன்றையும் வைத்திருந்தார்.
இந்த பதிவு முத்துக்குமரன் சட்ட ரீதியாக இந்த விஷத்தை கையாள்கிறார் என்பதனால் நானும் சட்டத்திடம் நிரூபிக்க என் தரப்பு ஆதாரங்களை சேமிக்கிறேன் என்பதை தெரிவிப்பித்தற்காக இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் வஹிதா அக்தர்.
இந்த பதிவு இந்த சர்ச்சைகள் முக்கிய பகுதியாகவும் , முத்துக்குமரனுக்கு எதிராக முக்கியமான ஆதாரமாக இருக்கக்கூடும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலர் கமெண்டடித்து வருகின்றனர்.
மீண்டும் சூடுபிடிக்கும் சர்ச்சை!
ஏற்கெனவே முத்துக்குமரன் குறித்து வஹிதா அக்தர் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள், ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன. தற்போது வெளியாகியுள்ள இந்த இந்த பதிவுகள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது, அவர்களது உறவு குறித்த புரிதல் என்னவாக இருந்தது என்ற அடுத்த கட்டத்திற்கும், சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.





