back to top
17 C
London
Friday, October 9, 2026
No menu items!
Homeதமிழ்நாடுMILKY MIST பொருட்களின் தரத்தில் குறைபாடு? அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்புத்துறை! - Kumudam

MILKY MIST பொருட்களின் தரத்தில் குறைபாடு? அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்புத்துறை! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தரம் குறைந்துள்ளதாகவும், அவற்றில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் நேரடி ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புகார்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கி வரும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் முதன்மை உற்பத்தி ஆலையில் விரிவான ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டும் உள்ளது.

இந்த ஆய்வின் போது, நிறுவனத்தின் தயாரிப்புத் தரம், கொழுப்புச் சத்தின் அளவு மற்றும் உணவு பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்துப் மாநில உணவு பாதுகாப்புத் துறையினரால் விரிவாகச் சோதிக்கப்படவுள்ளது.

மில்கி மிஸ்ட் விவகாரம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பால் உற்பத்தி நிறுவனங்களிலும் தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அதிரடி ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய உணவு பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

இதன் பகுதியாக, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை பெருந்துறை மில்கி மிஸ்ட் ஆலையில் விரைவில் நேரடி சோதனைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here