back to top
14.2 C
London
Friday, October 9, 2026
No menu items!
Homeசினிமாமுத்துக்குமரன் தவெக ஆதரவாளரா? திமுக ஆதரவாளரா? ரூட் மாறும் வாதம்...! - Kumudam

முத்துக்குமரன் தவெக ஆதரவாளரா? திமுக ஆதரவாளரா? ரூட் மாறும் வாதம்…! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பட்டத்தை வென்ற முத்துக்குமரன் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பான விவாதங்கள் அனல் பறக்க நடந்து வருகின்றன. வஹிதா அக்தர் என்ற சோஷியல் மீடியா பிரபலம், முத்துக்குமரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தித் தற்கொலைக்கு முயன்ற வீடியோக்களையும், அவருடன் இருக்கும் சில காட்சிகளையும் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

‘வேற லெவல்’ புலன் விசாரணை!

பொதுவாகவே இணையவாசிகளுக்கு ஏதேனும் ஒரு பிரபலத்தைப் பற்றிச் சிறிய கிசுகிசு கிடைத்துவிட்டால் போதும்; அவர்களின் பழைய போஸ்டுகள், லைக் செய்த பதிவுகள், யாரையெல்லாம் ஃபாலோ செய்கிறார்கள் என இன்ஸ்டாகிராமை ஒரு வழி பண்ணிவிடுவார்கள். ‘ஒருவேளை அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ’ எனப் பல கோணங்களில் ஆராய்வது அவர்களின் வழக்கமான பாணி.

ஆனால், முத்துக்குமரன் விஷயத்தில் இந்த புலன் விசாரணை கொஞ்சம் ‘டிஃபரண்ட் ரூட்டில்’ சென்று, இப்போது தீவிர அரசியல் போராகவே உருவெடுத்துள்ளது.

திமுக – தவெக ஆதரவாளர்களின் ‘அட்டாக் மோட்’

முத்துக்குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திராவிடம், இடதுசாரிக் கொள்கைகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசிய பல வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தவர். இதை வைத்தே களத்தில் குதித்த தவெக ஆதரவாளர்கள், “திமுக ஆதரவாளராகக் காட்டிக்கொள்பவர்கள் இப்படித்தான் பெண்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவார்கள்” என அட்டாக் மோடில் பேசத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு மேலும் தீனி போடும் விதமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து முத்துக்குமரன் முன்பே பேசிய வீடியோவை ஷேர் செய்து, “இப்படியெல்லாம் நல்லவர் போலப் பேசிவிட்டுப் பெண்ணை ஏமாற்றியுள்ளார்” என வறுத்தெடுத்து வருகின்றனர்.

மறுபுறம் சும்மா இருக்காத திமுக ஆதரவாளர்கள், முத்துக்குமரன் தவெக-விற்கு ஆதரவாகப் பதிவிட்ட சில பழைய போஸ்டுகளைத் தோண்டித் துருவி எடுத்து, “தவெக ஆதரவாளர்கள்னாலே இப்படித்தானா?” எனத் தங்களின் பங்கிற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். “அவர் உங்கள் ஆளு… இல்லை அவர் உங்க ஆளு…” என இரு தரப்பும் மாற்றி மாற்றிச் சண்டையிட்டுக் கொள்வதில், நடுவில் மாட்டிக்கொண்டு டேமேஜ் ஆவது என்னவோ முத்துக்குமரனின் இமேஜ் தான்.

விளக்கம் தேவைப்படும் மறுபக்கம்

இதுவரை வஹிதா அக்தர் என்ற பெண் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் வீடியோக்களையும் மட்டுமே வைத்து இணையவாசிகள் முத்துக்குமரனைக் வறுத்தெடுத்து வருகின்றனர். இருப்பினும், “நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, முத்துக்குமரன் தரப்பு விளக்கத்தையும் கேட்ட பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்” என்று நடுநிலையான மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here