Home சினிமா விஜய் சேதுபதி நடிப்பில் MASS காட்டும் “பத்தா”…ரசிகர்களை கவர்ந்ததா? – Kumudam

விஜய் சேதுபதி நடிப்பில் MASS காட்டும் “பத்தா”…ரசிகர்களை கவர்ந்ததா? – Kumudam

0


விமர்சனம், பத்தா

‘எட்டு வருஷம் ஜெயிலில் அடைச்சு வச்சாலும் திருந்தாத ரவுடிகளை எட்டு நாள் ஒரு டாய்லெட்ல அடைச்சு வச்சா திருந்திருவாங்க…’ – கேக்குறதுக்கு ஒரு பர்சன்ட்கூட நம்புற மாதிரி இல்லைன்னாலும் பாக்குற மாதிரி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தணிதரன். 

செல்போன் இருக்குற காலத்துல இந்த மாதிரி கதையை எல்லாம் நம்பறா மாதிரி சொல்ல முடியாது என்பதால், செல்போன் இல்லாத காலத்துல சம்பவம் நடப்பாதக சொல்லி சம்மாளித்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

ஊருக்குள்ள பெரிய ரவுடி விஜய் சேதுபதி… அவரை சிறுவன் சாய் பிருத்விராஜ். தவறுதலாக தன்னோட ஸ்கூல் டாய்லெட்டில் வைத்து பூட்டி விடுகிறான்… திறந்து விட்டால் தன்னை விஜய் சேதுபதி கொன்றுவிடுவாரோ என்ற பயத்திலேயே அவன் இருக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

டாய்லெட்டில் அடைபட்டு கிடக்கும் விஜய் சேதுபதி தன் மனைவி, மகளை நினைத்து ஏங்கித் தவித்தாலும், அவர்களுக்கு யாராலும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் பார்ப்பவர்களுக்கு பரிதாபமாக தெரியவில்லை. அவரை பூட்டி வைத்துவிட்டு பயமும், தவிப்புமாக தினமும் நடுங்கும்  சிறுவன் சாய் பிருத்விராஜ் நடிப்பு ஆஸ்காருக்கு சமம். விஜய் சேதுபதியின் மனைவியாக வரும் லிஜோ மோல் ஜோஸ் பிரமாதம். 

சாய் அபயங்கரின் இசை படத்துக்கு பொருந்தவே இல்லை. திரைக்கதையில் லாஜிக் இருந்தாலும் வேகம் இல்லை. சிறுவனின் அப்பாவை ஒருவன் அடித்து விட்டதால் விஜய் சேதுபதி கொந்தளிப்பது செயற்கை. பின்னர் அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்து அவர் நல்லவனாக மாறுவது என்பதெல்லாம்  திருத்தணி அல்வா.

பத்தா – பாவமன்னிப்பு

3 ஸ்டார் (இளையரவி)



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version