Home சினிமா ஜேசன் சஞ்சய் அதிரடியாக களமிறக்கிய “சிக்மா”…ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததா? – Kumudam

ஜேசன் சஞ்சய் அதிரடியாக களமிறக்கிய “சிக்மா”…ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததா? – Kumudam

0


விமர்சனம், சிக்மா

முதல்வர் மகனின் முதல் படம்… ஆக்‌ஷன் காட்சிகளை பார்க்கும் போது அப்பாவை ஹீரோவாக நினைத்து எழுதி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது… 

வில்லனின் ஆயிரம் கோடி ஹெயிஸ்ட்… அதன் சாவியை தேடும் இரண்டு கோஷ்டிகள்… அந்த சாவி தங்களிடம் இருப்பது தெரியாமல், வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு அந்த சாவியுடன் இணைந்த பென் டிரைவ்வை வில்லனிடமே பேரம் பேசும் ஹீரோ கோஷ்டி… கடைசியில் சாவி யார் கைக்கு போனது? பணம் யாருக்கு, எப்படி கிடைத்தது? என்பது தான் கிளைமாக்ஸ்….

ஜேஸன் விஜய்யின் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு திரைக்கதையும், மேக்கிங்கும் மிரட்டுகிறது. சரியான இடங்களில் காமெடியை தூவியிருப்பது சபாஷ்!

ஒரு இயக்குநரின் திறமை ஆக்‌ஷன் காட்சிகளிலோ, பாடல் காட்சிகளிலோ தெரியாது. சாதாரணமாக நிகழும் உரையாடல் காட்சிகளில் உணர்வுகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை பொறுத்துதான் தெரியும்… அதற்கு லைப்ரரி காட்சிகள் சரியான உதாரணம். அந்த வகையில் ஒரு இயக்குநராக ஜேசன் சஞ்சய் தேறிவிட்டார்…

ஹீரோ சந்தீப் கிஷன் ஆக்சனிலும் காமெடியிலும் அசத்தல். ஹீரோயின் ஃபரியா அப்துல்லா அழகு. வில்லன்கள் சம்பத், ஷிவ் பண்டிட் ஓ.கே. ராஜூ சுந்தரம் காமெடி கலக்கல். தமனின் இசை நல்ல டெம்போ…

தன்னோட ஆயிரம் கோடி பொக்கிஷத்தின் சாவியை வில்லன் எவனோ ஒருவனிடம் அவன் கேட்காமலே வாலன்டியராக கொடுத்துவிட்டு, பின்னர் அவனை தேடி படம் முழுக்க ஓடிக்கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது, கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கலாம்…

சிக்மா – ஜிவ்…மா

3 ஸ்டார் (இளையரவி) 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version