Home சினிமா MASS போஸ்டரில் தலைவர்… ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி UPDATE!...

MASS போஸ்டரில் தலைவர்… ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி UPDATE! – Kumudam

0


கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் அறிவிப்பு வெளியானது முதலே, ரஜினி ரசிகர்கள் ‘ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்று (அக்.3) புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு டிரெய்லர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் துப்பாக்கியுடன் மாஸான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். படத்தின் டிரெய்லர் நாளை அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மீண்டும் இணையும் பழைய கூட்டணி

நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, சிவராஜ்குமார், விநாயகம், ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில், இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சாரமூடு, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மேகனா ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முதல் முறையாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் IMAX வடிவத்திலும் வெளியாக உள்ளது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

நாளை வெளியாகவுள்ள டிரெய்லரில் முத்துவேல் பாண்டியனின் அடுத்த ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version