மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, நேற்று(அக்-3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சமீபத்திய தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்ததுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெகவை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக திமுக கருதாமல் விட்டதே தங்களது தவறு என ஸ்டாலின் குறிப்பிட்டார். கொள்கை ரீதியான எதிர்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், தவெகவை கண்டுகொள்ளாமல் விட்டதாகவும், எஸ்ஐஆர் நடவடிக்கையால் பல வாக்குகள் நீக்கப்பட்டதும் தங்களது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்வதாகக் கூறி முதலமைச்சர் விஜய் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். அந்தத் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்டவை என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், வரலாற்றில் பல்வேறு தலைவர்கள் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களும் அரசின் மூலமாகவே நிறைவேற்றப்பட்டவை என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தையும் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார். அந்தத் திட்டம் எந்த நிதியில் செயல்படுத்தப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவது சரியா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெகவைச் சேர்ந்தவர்களை நம்பிச் செல்பவர்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இந்த விமர்சனத்திற்கு தவெக ஜடி விங் தக்க பதலடி கொடுத்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“Property comedy செய்து மதுரை முத்துவின் competitor ஆன தோல்வித் தலைவர் அவர்களே! காலம் காலமாய் கட்டுமரக் கதைகளால் கட்டமைத்த போலிப் பிம்பம் உடைந்து போனதில் பதற்றம் குறையவில்லையா? காணொளி வெளியிட்டு விளக்கமளித்தது போதாதென்று, மேடைக்கு மேடை மிசா கைதுக் குறித்து ஒப்பாரி வைக்கிறீர்களே தவிர, detention copy-ஐ மட்டும் காட்ட மறுக்கிறீர்களே? ஆபாசத்தையும் அவதூறையும் ஆராதிக்கும் கோமாளிக் கூட்டத்தின் தலைவரே! Party fund, ஊழல் என்றால் மட்டும் ஏன் பதறி சட்டமன்றத்தை விட்டு ஓட்டமெடுக்கிறார்கள் திமுக உறுப்பினர்கள்?
அப்பாவின் பேனாவிற்கு சிலை வைக்கத் துடித்தது யாருடைய அப்பா வீட்டுப் பணமோ என்பதற்காகவா? வான்கோழி என்ற காவியத்தின் புகழைப் பரப்புவதற்காகவா? வாயைத் திறங்க, ஊழல் இலக்கியமே! ரீல்ஸ் ஆட்சி என்று ரீல்ஸ் போட்டு புலம்பும் ஊழல் பீரோ மன்னனே! உங்களின் ஆபாசநதி, வன்மநதி – குடும்பச் சொத்து நள்ளிரவில் Insta-வில் உலா வருவது எதற்கென, அடுத்து நிகழ்த்தவிருக்கும் ஒன்றுமில்லாத உரையில் விளக்கமளிக்க மறவாதீர்கள்.
ரீல்ஸ் காணொளி வெளியிட்டு விளக்கமளித்தாலும் மகிழ்ச்சியே! “எங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை” என்று வெட்டி வசனம் பேசிவிட்டு, வெற்றித் தலைவரின் உடை, ramp walk, எங்கள் தோழர்கள் அன்பாய்த் துண்டு வீசுகிறார்களென உபி கோமாளிக் கூட்டத்தைத் துண்டு வீசச் சொன்னது என அனைத்தையும் Copy-Paste செய்த Copy-Paste பண்ணையாரே!
பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களைத் தொடர்ந்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசும் ஆபாசக் கும்பலின் தலைமையே! You continue… பெண்களும், குழந்தைகளும், மக்களும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் தேர்தலிலும் இனி உங்களுக்குத் தக்கப் பாடம் புகட்டிக் கொண்டே இருப்பார்கள்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து உள்ளது.
