Home அரசியல் “இதற்கு பதில் உண்டா?” விஜயிடம் ஸ்டாலின் கேட்ட 4 கேள்விகள் என்ன? – Kumudam

“இதற்கு பதில் உண்டா?” விஜயிடம் ஸ்டாலின் கேட்ட 4 கேள்விகள் என்ன? – Kumudam

0


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவதற்காக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

தொகுதி முழுவதும் இரவு, பகல் பாராமல் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் வேட்பாளர்கள், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் களத்தில் இறங்கி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளின் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.

இந்நிலையில், இன்று தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ள பிரசாரத்தைத் தொடர்ந்து, அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 4 கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், விஜயிடம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பதிவில் பதிவிட்டுள்ளதாவது,

“CM சார்…

நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?

1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?

2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?

3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?

4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?

தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!”  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version