Home அரசியல் “ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு… ஆபாச நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்… விளாசிய முதலமைச்சர்”! – Kumudam

“ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு… ஆபாச நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்… விளாசிய முதலமைச்சர்”! – Kumudam

0


தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி, தாராபுரம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.2) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தவெக வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், அவரை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” உள்ளிட்ட வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும், அவரது உருவத்தை குறிப்பிட்டு கேலி செய்யும் வகையிலும் இந்த உருவத்தை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடித்தாரோ என்று பேசியதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு தவெக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண் வேட்பாளரை உருவ கேலி செய்து இழிவுபடுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி, தவெக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையம், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யும் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். 

நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.”



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version