back to top
12.2 C
London
Friday, October 2, 2026
No menu items!
Homeசினிமாசஞ்சய்காக ஓடோடி வந்த சங்கீதா... முந்திக் கொண்ட சாஷா...லண்டனில் இருந்து முதல் ஆளாக வந்தார்களா? -...

சஞ்சய்காக ஓடோடி வந்த சங்கீதா… முந்திக் கொண்ட சாஷா…லண்டனில் இருந்து முதல் ஆளாக வந்தார்களா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் என்பதாலும், விஜய்யின் மகன் இயக்குநராக களமிறங்குவதாலும் ‘சிக்மா’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

முதல் காட்சியை பார்க்க வந்துள்ள சங்கீதா மற்றும் திவ்யா சாஷா

‘சிக்மா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் காட்சியை காண ஜேசன் சஞ்சய்யின் தாயாரும், முதலமைச்சர் விஜய்யின் மனைவியுமான சங்கீதா,மற்றும் ஜேசன் சஞ்சயின் சகோதரியான திவ்யாவும்  திரையரங்கிற்கு வந்துள்ளார்கள். 

தாய் மற்றும் சகோதரியும் இருவரும் வருகை புரிந்துள்ள நிலையில், அதே திரையரங்கிற்கு இயக்குநரான ஜேசன் சஞ்சய்யும் அறிமுகமாகியுள்ள இப்படத்தை காண்பதற்கு குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்துள்ளார்கள். 

சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் சங்கீதா ‘சிக்மா’ படத்தை பார்த்து வருகிறார். ஜேசன் சஞ்சய்யின் இயக்குநர் அறிமுகப் படத்தை அவரது தாயார் திரையரங்கில் வந்து பார்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதனிடையே, ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை அவரது தந்தையும் முதலமைச்சருமான விஜய் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜேசன் சஞ்சய் சொன்ன சுவாரஸ்ய பதில்

முன்னதாக பேட்டி ஒன்றில், தனது தந்தை விஜய் ‘சிக்மா’ படத்தை பார்த்துவிட்டு போன் செய்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால் என்ன நினைப்பீர்கள் என்று ஜேசன் சஞ்சய்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், தனது தந்தை பொதுவாகவே அமைதியானவர் என்றும், ஒரு கேள்வி கேட்டால் கூட சில விநாடிகள் யோசித்த பிறகே பதிலளிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

ஒருவேளை படம் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால், ‘அப்பா போனை கட் பண்ணிட்டீங்களா?’ என்று கேட்டுவிட்டு போனை வைத்துவிடுவேன் என அவர் நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

மேலும், ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்த்து ஆராய்ந்து கருத்து தெரிவிக்க சிறிது நேரம் தேவைப்படும் என்றும், தனது முதல் படத்தை பார்த்த பிறகு தனது தந்தை நிச்சயம் பெருமைப்படுவார் என்றும் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘சிக்மா’ இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது அடுத்தடுத்த காட்சிகளில் தெரியவரும்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here