back to top
21.1 C
London
Friday, October 2, 2026
No menu items!
Homeஅரசியல்என்னது டீ கடை முதல் விவசாயிகள் சந்திப்பு வரை எல்லாமே SCRIPTED- ஆ ? வைரலாகும்...

என்னது டீ கடை முதல் விவசாயிகள் சந்திப்பு வரை எல்லாமே SCRIPTED- ஆ ? வைரலாகும் புஸ்ஸி சிக்னல் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 2-வது கட்டமாக பிரசாரம் மேற்கொண்டார்.

பொதுக்கூட்டம் இல்லை.. இந்த முறை ரோடு ஷோ !

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் மூலம் பிரசாரம் செய்த விஜய், தற்போது வித்தியாசமான முறையில் மக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தொடங்கிய ரோடு ஷோ, மதுராந்தகம் நோக்கி நடைபெற்றது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

35 இடங்களில் வாக்குசேகரிப்பு :

மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை பல்வேறு பகுதிகளில் மக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ திட்டமிடப்பட்டிருந்தது. பிரசார வாகனத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுடன் நின்றபடி விஜய் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

வழியெங்கும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட விஜய், கை அசைத்தும் ஆதரவு கோரியும் பிரசாரத்தை மேற்கொண்டார். மாமண்டூர், புக்கத்துறை, படாளம், ஜானகிபுரம், கருங்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக இந்த ரோடு ஷோ நடைபெற்றது.

டீக்கடையில் விஜய்.. என்ன நடந்தது ?

ரோடு ஷோவின்போது , திடீரென பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது. அதன்பின் உதவியாளர் ஜெகதீஷ் புஸ்ஸி ஆனந்தை அழைத்து ஏதோ பேசியுள்ளார். அதன்பின்னர் , விஜய் கீழிறங்கி சென்று அங்குள்ள டீக்கடை ஒன்றில் பொதுமக்களுடன் சில நேரம் கலந்துரையாடினார்.

அப்போது டீ குடிப்பது போன்று டம்ளரை வாங்கிக்கொண்டு அருகில் இருந்த பெரியவருடன் பேசிக்கொண்டு இருந்தார் பின் டீயை குடிப்பது போன்று வாயருகில் கொண்டு சென்றுவிட்டு பின்னர் போதுமென்று கொடுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் விஜய் கலந்துரையாடி வாக்குகள் சேகரித்தார்.

விவசாய நிலத்தில் விஜய்.. டிராக்டர் ஓட்டிய காட்சி !

டீக்கடையைத் தொடர்ந்து விவசாய நிலப்பகுதிக்கும் சென்ற விஜய், அங்கிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது விவசாய நிலத்தில் இருந்த டிராக்டரை விஜய் ஓட்டிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடிய பின்னர், டிராக்டரில் அமர்ந்து விஜய் வாக்கு சேகரித்ததார்.

‘ஓகேவா?’.. ‘ஓகே!’ – வைரலாகும் புஸ்ஸியின் சைகை :

இதன்பின் தான் ட்விஸ்ட்டே , இவை அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் பிரசார வாகனத்தில் விஜய் ஏறியபோது நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

விஜயுடன் இருந்த புஸ்ஸி ஆனந்த், வாகனத்திற்குள் இருந்த விஜயின் உதவியாளர் ஜெகதீஷ் பழனிசாமியை நோக்கி ‘ஓகேவா?’ என்பது போல் சைகை காட்டியதாகவும், அதற்கு ஜெகதீஷ் பழனிசாமி “THUMBS UP” சைகை காட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த காட்சியை வைத்து பல்வேறு விதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.

‘எல்லாமே SCRIPT – ஆ ?’ – சமூக வலைதளங்களில் எழும் கேள்விகள் :

மக்களை நேரடியாக சந்திப்பது, டீக்கடையில் அமர்ந்து பேசுவது, விவசாயிகளை சந்திப்பது, டிராக்டர் ஓட்டுவது என ரோடு ஷோவின்போது இடம்பெற்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒருபுறம், அரசியல் பிரசாரத்தில் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை சந்திப்பது இயல்பான தேர்தல் பிரசார நடைமுறை என ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மறுபுறம், டீக்கடை மற்றும் விவசாய நிலம் உள்ளிட்ட இடங்களில் விஜய் தோன்றிய காட்சிகளையும், அதன் பின்னர் வெளியாகியுள்ள ‘ஓகே’ சைகை காட்சியையும் இணைத்து சில சமூக வலைதள பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

‘சாமானிய மக்களை சந்திப்பது உண்மையான மக்கள் தொடர்பா? அல்லது தேர்தல் வாக்குசேகரிப்புக்காக வடிவமைக்கப்பட்ட பிரசார காட்சிகளா?’ என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

‘திரைக்கதை போல அரசியல் பிரசாரம்?’ – நெட்டிசன்கள் விமர்சனம் :

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயின் ஒவ்வொரு பொது நிகழ்வும் சமூக வலைதளங்களில் அதிகளவில் கவனிக்கப்படும் நிலையில், இந்த ரோடு ஷோ காட்சிகளும் அதற்கு விதிவிலக்காகவில்லை.

டீக்கடை சந்திப்பு முதல் விவசாய நிலம், டிராக்டர் ஓட்டியது வரை இடம்பெற்ற காட்சிகளை வைத்து, சில நெட்டிசன்கள் ‘எல்லாமே திரைக்கதைப்படி நடப்பது போல இருக்கிறது’ என விமர்சித்து வருகின்றனர்.

மேலும்,”மக்களுக்கான தூய சக்தி தவெக” என்று மேடைக்கு மேடை சொல்லும் விஜய் சாமானிய மக்களை சந்திப்பது வாக்குகளுக்காக மட்டும்தானா என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகின்றன.

மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜயின் இந்த ரோடு ஷோ மற்றும் அதில் இடம்பெற்ற காட்சிகள் தேர்தல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பேசுபொருளாகியுள்ளன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here