பல ஆண்டுகளாக மெல்பர்னில் பணியாற்றி வந்த மாணிக்கம் நெடுமாறன், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவியவர். பின்னர் புத்தத் துறவியாக வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார்.
புற்றுநோய்க்காக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 1-ம் தேதி காலை இந்திய நேரப்படி 8.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் புத்த மத மரபுகளின்படி மெல்பர்னிலேயே நடைபெற உள்ளன.
மகனின் இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்க முடியாத நிலை பழ. நெடுமாறனுக்கு ஏற்பட்டுள்ளது. அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டிருப்பதால், அவரும் அவரது துணைவியாரும் ஆஸ்திரேலியா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
மகனை இழந்த துயரத்தில் இருக்கும் பழ. நெடுமாறன் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
