Home தமிழ்நாடு மறுபடியும் வந்துட்டான் மக்களே டெங்கு…. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்னது தெரியுமா? – Kumudam

மறுபடியும் வந்துட்டான் மக்களே டெங்கு…. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்னது தெரியுமா? – Kumudam

0


தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை சுமார் 18,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் மிகக் கடுமையான முறையில், அதாவது 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதியதாக 72 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்ப்பட்டுள்ளது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் அது 1,290 ஆக உயர்ந்து இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை சுமார் 18,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவர்களின் ஆலோசனை:

சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மருத்துவர்களிடம் ஆலோசனைகள் அவசியமாகிறது. அதன் வகையில் மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால், சென்னையில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் சுமார் 90% முதல் 95% வரையிலான வழக்குகள் சாதாரண காய்ச்சலாகவே உள்ளன.

இவர்கள் வீடுகளிலேயே தங்கி ஓய்வு எடுத்து தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் குணமடைந்து விடுகின்றனர். மீதமுள்ள 5% முதல் 10% நோயாளிகள் மட்டுமே தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். சளி, இருமல் இல்லாமல் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான உடல்வலி இருந்தால் அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை:

டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளை முடுக்கவிட்டுள்ளது. மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 3500க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூவம், அடையாறு போன்ற பெரிய நீர்நிலைகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்த நவீன ட்ரோன்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.  வீடுகள் மற்றும் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்களுக்கு அறிவுரை:

பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றிலும், மொட்டை மாடிகளிலும் டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் இளநீர் ஓடுகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவம் (மெடிக்கல்களில் நேரடியாக மாத்திரை வாங்கி உட்கொள்வது) செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அல்லது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version