back to top
20.2 C
London
Thursday, October 1, 2026
No menu items!
Homeசினிமா‘என் இனிய பொன் நிலவே’ பாடல் வழக்கு ! இளையராஜாவை LEFT HAND - ல்...

‘என் இனிய பொன் நிலவே’ பாடல் வழக்கு ! இளையராஜாவை LEFT HAND – ல் ஒதுக்கிய சுப்ரீம் கோர்ட் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இசை உரிமை தொடர்பான நிறுவனத்துக்கு இடையே நீடித்து வந்த ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் தொடர்பான காப்புரிமை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

‘மூடுபனி’ படத்தில் இடம்பெற்ற பாடல் :

1980-ம் ஆண்டு வெளியான ‘மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலவே’ பாடல், தமிழ் திரையுலகில் ரசிகர்களால் நீண்ட காலமாக ரசிக்கப்பட்டு வரும் பாடல்களில் ஒன்றாகும். இந்தப் பாடலின் இசையை இளையராஜா அமைத்திருந்தார்.

இந்த நிலையில், பாடலின் மறு உருவாக்கம் செய்யப்பட்ட பதிப்பு பின்னர் வேறொரு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் காப்புரிமை தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

‘அகத்தியா’ படத்தால் உருவான சர்ச்சை :

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த ‘அகத்தியா’ திரைப்படத்தில், ‘என் இனிய பொன் நிலவே’ பாடலின் மறுஉருவாக்கப்பட்ட பதிப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பாடலை பயன்படுத்துவதற்கான உரிமத்தை இளையராஜாவிடமிருந்து பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இசை உரிமைகள் தொடர்பான நிறுவனமான ‘சரிகம’ எதிர்ப்பு தெரிவித்தது.

பாடலின் அசல் தயாரிப்பாளரிடமிருந்து தங்களுக்கு உரிமைகள் கிடைத்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் பாடலின் ஒலிப்பதிவு உள்ளிட்ட உரிமைகள் தங்களிடம் இருப்பதாகவும் சரிகம தரப்பில் வாதிடப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு :

இந்த விவகாரம் தொடர்பாக சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாடலின் வெவ்வேறு அம்சங்களுக்கான உரிமைகளை தனித்தனியாகப் பார்க்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டது.

கடந்த மே 21-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், பாடலின் இசை அல்லது மெட்டுக்கான உரிமை இளையராஜாவுக்கு இருக்கலாம் என்றாலும், பாடல் வரிகள் மற்றும் ஒலிப்பதிவு மீதான உரிமையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முழுமையான உரிமையை கோர முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மறுஆய்வு மனுவும் நிராகரிப்பு :

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி இளையராஜா தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் மே 26-ம் தேதி நிராகரித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணை :

இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது.

டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தலையிடுவதற்கான காரணங்கள் இல்லை எனக் கூறிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதன் மூலம், ‘என் இனிய பொன் நிலவே’ பாடலின் உரிமை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேற்கொண்ட சட்டப்போராட்டத்தில் தற்போதைய கட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடவில்லை.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here