back to top
25.7 C
London
Tuesday, September 29, 2026
No menu items!
Homeஉலகம்ஐ.நா. அரங்கில் ஒலித்த தமிழரின் குரல்! கல்லணை முதல் பிரகதீஸ்வரர் கோயில் வரை பேசிய சென்னை...

ஐ.நா. அரங்கில் ஒலித்த தமிழரின் குரல்! கல்லணை முதல் பிரகதீஸ்வரர் கோயில் வரை பேசிய சென்னை தொழிலதிபர்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்ற நிலையில், சதீஷ் குமார் சந்தானம் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கால சமூகங்களுக்கான நிலையான வாழ்வியல் குறித்து பேசிய அவர், தமிழர்களின் தொன்மையான பொறியியல் அறிவையும் தனது உரையில் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக, பொதுநலனை மையமாகக் கொண்டு கட்டப்பட்ட கல்லணையையும், அறிவியல் அறிவு, பொறியியல் நுட்பம் மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலையும் உதாரணங்களாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதோடு, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளையும் தனது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். உலகளாவிய மனிதநேய சிந்தனையை வெளிப்படுத்தும் இந்த வரிகள், ஏற்கெனவே பல்வேறு சர்வதேச அரங்குகளில் கவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நீர் பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல், உணவுப் பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இயற்கையுடன் இணைந்த நிலையான வாழ்க்கை முறை ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் அவரது பங்களிப்புக்காக Global Change Maker Honour 2026 விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டாக்டர் ஜியோவானி ஜிங் வழங்கினார். 

கல்லணையின் நீரியல் அறிவும், தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக்கலை நுட்பமும்… இவை எல்லாம் நம் வரலாற்றில் இருக்கும் பெருமைகள். அந்தப் பெருமைகளை சர்வதேச அரங்கில் எடுத்துச் சென்றிருக்கிறார் ஒரு தமிழர் என்பதுதான் இந்த நிகழ்வின் கவனிக்கத்தக்க அம்சமாக அமைந்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here