back to top
25.7 C
London
Tuesday, September 29, 2026
No menu items!
Homeஅரசியல்துரோகம்... பிச்சை... திருட்டு! தவெக – அதிமுக மோதல்... வார்த்தைகளில் அனல் பறக்குது! - Kumudam

துரோகம்… பிச்சை… திருட்டு! தவெக – அதிமுக மோதல்… வார்த்தைகளில் அனல் பறக்குது! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தேர்தல் களம் என்றாலே வாக்குறுதிகளும் விமர்சனங்களும் வரிசைகட்டும். ஆனால், இங்கே விவகாரம் கொஞ்சம் வேறு லெவலில் இருக்கிறது. தவெகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள்தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

தவெக அட்டாக்: “துரோகம்… முதுகில் குத்தியது!”

அதிமுகவைக் குறிவைத்து தவெக வெளியிட்டுள்ள விமர்சனத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைத்த விவகாரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனக் கூறிவிட்டு மீண்டும் அதே அணியில் இணைந்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டதாக தவெக குற்றம்சாட்டியுள்ளது.

https://x.com/TVKHQITWingOffl/status/2104832601764851745?s=20

நீட் தேர்வு விவகாரத்தையும் கையில் எடுத்துள்ள தவெக, மாணவர்களின் நலனுக்கு எதிராக அதிமுக செயல்பட்டதாக விமர்சித்துள்ளது. கட்சியின் கொள்கைகளையும், அதைத் தொடங்கியவர்களின் அரசியல் நோக்கங்களையும் மறந்துவிட்டு, சுயநலத்துக்காகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இதோடு நிற்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலமைச்சர் எனக் குறிப்பிட்டதோடு, எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல், ஒருவரை விலைக்கு வாங்கி வெற்றி பெற முயற்சிப்பதாகவும் தவெக தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தவெகவின் விமர்சனத்தில், “துரோகம்”, “முதுகுக்குத்து”, “நேர்மையற்ற தன்மை” போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதுதான் இந்த மோதலின் ஹைலைட். 

அதிமுக பதிலடி: “பிச்சை… திருட்டு… ஓட்டம்!”

தவெகவின் விமர்சனத்துக்கு அதிமுகவும் அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவைப் பெறுவதற்காக மற்ற கட்சிகளின் அலுவலகங்களுக்குச் சென்று ஆதரவு திரட்டியதாகக் கூறி, தவெகவின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளது.

https://x.com/AIADMKITWINGOFL/status/2104853318464069987?s=20

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்ததைச் சுட்டிக்காட்டிய அதிமுக, அதனை “பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை இணைத்துக்கொண்டு ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, அதனை “திருட்டு” என்றும் வர்ணித்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்திப்பது, சட்டமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்வது, கரூர் சம்பவத்தின்போது நடந்துகொண்ட விதம் எனப் பல விவகாரங்களையும் அதிமுக தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாகத் தவெகவின் அணுகுமுறையையும் விமர்சித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தையும் நீட் தேர்வு தொடர்பான அரசியல் வரலாற்றையும் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நிற்கும் தவெக, அதிமுகவின் கூட்டணியை விமர்சிப்பது எந்த அடிப்படையில் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

இறுதியாக, பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் ஒதுங்கியிருப்பதாகக் கூறி தவெகவைச் சாடிய அதிமுக, கிண்டலான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளது.

கொள்கை மோதலா… வார்த்தைப் போரா?

ஒருபுறம் பாஜக கூட்டணி, நீட் தேர்வு, அரசியல் துரோகம் என தவெக கேள்விகளை எழுப்புகிறது. மறுபுறம் ஆட்சியமைத்த விதம், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு, காங்கிரஸ் கூட்டணி என அதிமுக பதிலடி கொடுக்கிறது.

இரு தரப்பும் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் விமர்சனங்களாக உள்ள நிலையில், அவற்றில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கூற்றையும் தனித்தனியாகச் சரிபார்ப்பது அவசியம்.

தேர்தல் அரசியலில் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது புதிதல்ல. ஆனால், இந்த முறை பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் காரசாரமாகவே இருக்கின்றன.

அரசியல் மேடையில் மைக் மோதல் ஒரு பக்கம் இருக்கட்டும்… சமூக வலைதளத்தில் “துரோகம்” முதல் “பிச்சை”, “திருட்டு” வரை வார்த்தைகளால் நடக்கும் இந்த மோதல் எங்கே போய் முடியும் என்பதுதான் இப்போதைய கேள்வி. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here