back to top
16.5 C
London
Monday, September 28, 2026
No menu items!
HomeசினிமாJAILER 2 AUDIO LAUNCH-க்கு அனுமதி மறுப்பு? ரஜினியை பழிவாங்குகிறாரா விஜய்? - Kumudam

JAILER 2 AUDIO LAUNCH-க்கு அனுமதி மறுப்பு? ரஜினியை பழிவாங்குகிறாரா விஜய்? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் அதே அளவிலான பிரம்மாண்டத்தில் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதனால், தலைவர் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 2 நடைபெற இருந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சி?

முன்னதாக ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை அக்டோபர் 2-ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என்றும், சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

JAILER 2 RAVE – புதிய இசை கொண்டாட்ட திட்டம் :

இதற்கிடையே, சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பமும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. அதே நாளில் “JAILER 2 RAVE” என்ற பெயரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் படத்தின் பாடல்களை பாடிய பாடகர்கள், இசைக்கலைஞர்கள் நேரடியாக பங்கேற்று ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அனிருத் இசையமைத்த மற்றொரு படத்திற்காக நடத்தப்பட்ட லைவ் மியூசிக் கான்செர்ட் வடிவிலேயே ஜெயிலர் 2-க்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்… ரஜினியின் பேச்சை எதிர்பார்த்தவர்கள் :

பொதுவாக ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் திரைப்பட விழாக்களில் அவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெறும். குறிப்பாக ஜெயிலர் முதல் பாகத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி, ரஜினியின் பேச்சு மற்றும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதேபோல் ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் தற்போது தனி ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லாமல், இசை கான்செர்ட் வடிவில் மட்டும் நிகழ்ச்சி நடைபெற இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி பிரச்சனையா? காரணம் என்ன ?

ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெறாததற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

குறிப்பாக,ரசிகர்களிடையே தலைவர் படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லையே என்பது பெரும் ஏமாற்றம் தான். சமீப காலமாக மின்வெட்டு பிரச்சனைகள் பெரும் தலைவலியாய் இருந்து வருவதாலும் , நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லான்ச் நடத்தினால் பெரும் அளவு மின்சாரத்தேவை இருக்கும் என்பதால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ,

நேரு ஸ்டேடியத்திற்கு பதிலாக சன் நிறுவனத்தின் உள்அரங்கிலேயே ஜெனெரேட்டர் உதவியுடன் இந்த ஜெயிலர் 2 ரேவ் கான்சர்ட் நடக்கப்போவதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் vs திமுக ( சன் பிக்சர்ஸ்) / ரஜினி ?

ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் தொடர்பான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து படக்குழு அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடாத நிலையில் இன்று வெளியிட்ட ஜெயிலர் 2 ரேவ் கான்செர்ட் அறிவிப்பு , நெட்டிசன்களின் யூகங்களை ஒட்டியே இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

முன்னதாகவே ஆடியோ லான்ச் விழாக்களில் ரஜினி விஜய் பேச்சுக்கள் மாறி மாறி மறைமுக தாக்குதல்கள் கொண்டதாக கருதப்பட்ட நிலையில் தற்போது , விஜய் முதலலமைச்சர் ஆனதும் திமுக குடும்பமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்பதை விட ரஜினி உடனான மறைமுக மனக்கசப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார். என்றும்,

அதன்காரணமாக, ஆடியோ லான்ச் அனுமதி குறித்து விஜய்யிடம் ரஜினி பேசுவதற்கு தன்மானம் பார்ப்பதாகவும் நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெயிலர் 2 டிரெய்லர் எப்போது?

இதற்கிடையில், ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல்களும் இணையத்தில் பரவி வருகின்றன. 

செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் முழு ஆல்பம் மற்றும் “JAILER 2 RAVE” நிகழ்ச்சியை தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், ஜெயிலர் 2 படத்திற்கு தனி ஆடியோ லான்ச் இருக்குமா? இல்லை இசை கான்செர்ட் மட்டும்தானா? அதற்கான உண்மையான காரணம் என்ன? என்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here