back to top
16.9 C
London
Monday, September 28, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்! - Kumudam

தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று காலை மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்திலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை செல்லும் வழியெங்கும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களையும் தொண்டர்களையும் பார்த்தபடி, முதலமைச்சர் உற்சாகமாக கை அசைத்துச் சென்றார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது, மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்குத் தனது கரங்களால் ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களை அணிவித்தார். தொடர்ந்து மருத்துவமனை பிரசவ வார்டுக்கு நேரில் சென்று, அங்கு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார். இன்றைய தினத்தில் மட்டும் மதுரை மாவட்டத்தில் 6,400 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் & நிதி ஒதுக்கீடு

தகுதி: 2026-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இத்திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

கொள்முதல்: முதற்கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினமும் சராசரியாக 100 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

நிதி ஒதுக்கீடு: இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here