Home தமிழ்நாடு வீரமணியால் பறிபோன 16 வயது சிறுமியின் உயிர் ! 20 வருசத்துக்குப் பின் வெளியான உண்மை...

வீரமணியால் பறிபோன 16 வயது சிறுமியின் உயிர் ! 20 வருசத்துக்குப் பின் வெளியான உண்மை ! – Kumudam

0


சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடர்ந்து புதிய புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் அளித்த புகார்களை தொடர்ந்து, வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவி செய்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் :

புதிய புகாரில், தனது மகள் கடந்த 2004-ம் ஆண்டு ஐஸ்ஹவுஸ் பகுதியில் வசித்து வந்தபோது, வீரமணி கல்வி உதவி செய்வதாக கூறி அவருடன் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் அந்த பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் அது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

வழக்கு ஆவணங்கள் அழிந்ததாக கூறப்பட்டதாக தகவல் :

மேலும், 2017-ம் ஆண்டு ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வீரமணி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தனது மகளுக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து மீண்டும் காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல சிறுமிகள் அளித்த புகார்களால் தீவிரமடைந்த விசாரணை :

முன்னதாக, வீரமணி மீது 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது பதிவான புதிய வழக்கு தொடர்பாகவும் வீரமணியிடம் விசாரணை நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை :

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பெண் அதிகாரிகள் இடம்பெறும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமிகளின் வாக்குமூலங்கள், கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் பழைய புகார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version