Home தமிழ்நாடு தாய்மாமன் தங்க மோதிரம்…குட்டீஸ்க்கு ஆபத்தா? மருத்துவர்கள் சொல்வது என்ன? – Kumudam

தாய்மாமன் தங்க மோதிரம்…குட்டீஸ்க்கு ஆபத்தா? மருத்துவர்கள் சொல்வது என்ன? – Kumudam

0


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில்  தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தவெக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மதுரையில் முதலமைச்சர் விஜய் கையால் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். ஜுன் 22 ஆம் அன்று முதல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக 107 மருத்துவமனைகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், தாய்மாமன் சீர் செய்யும் தமிழ் கலாச்சாரத்தை முன்னிறுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரத்யேக மோதிரத்தின் வடிவமைப்பு புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த மோதிரத்தின் வடிவமைப்பு குறித்து குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள் சில முக்கியமான பாதுகாப்பு ஆலோசனைகளையும் கவலைகளையும் முன்வைத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு அணிவிக்கின்ற தங்க மோதிரங்கள் மேல்புறம் தட்டையாகவும், இருபுறமும் விளிம்புகளுடனும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மோதிரத்தைப் பார்க்கும் போது கலைநயத்துடனும் மிக அழகாகவும் காட்சி அளிக்கிறது. அரசு வழங்கும் பரிசுப் பொருள் என்பதால் மிகவும் கவனத்துடன் இந்த டிசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெரியவர்கள் அணியும் ஆபரணங்களுக்கும் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் அணியும் ஆபரணங்களுக்கும் இடையே மருத்துவ ரீதியாக மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து ஒரு பிரபல குழந்தை நல மருத்துவரிடம் பேசியபோது, இத்திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் குழந்தைகளுக்கு அணிக்கின்ற மோதிரத்தின் வடிவமைப்பில் ஒரு சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர் பேசியாதாவது, “அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தருவது மிகச் சிறந்த முயற்சி. ஆனால், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ‘தட்டையான மேல் பகுதி மற்றும் கூர்மையான ஓரங்கள்’ கொண்ட வடிவமைப்பு கைக்குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. பச்சிளம் குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானது மற்றும் எளிதில் காயம் ஏற்படக்கூடியது.

குழந்தைகள் எப்போதும் தங்கள் கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டே  இருப்பதால் விரல்களில் அணியப்பட்ட மோதிரத்தின் மூலம் முகத்தில் தேய்ப்பது, கண்களைத் தொடுவது, உடலை உரசுவது போன்ற செயல்களைத் தொடர்ந்து செய்வார்கள்.

அப்படி அசைக்கும் போது, இந்த தட்டையான விளிம்புகள் குழந்தைகளின் முகம், கன்னம் அல்லது கண்ணில் பட்டு கீறல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைக்கு தொடர்ந்து ஒருவித அசௌகரியத்தை கொடுக்கும். எனவே, இந்த மோதிரத்தை எந்தவித விளிம்பும் இல்லாமல், முழுக்க முழுக்க உருண்டையான வளைந்த வடிவில் செய்திருந்தால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் பாதுகாப்பாக இருந்திருக்கும்.” என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.

தங்கம் மோதிரம் அணிவதால் வரக்கூடிய பொதுவான சிக்கல்கள்:

பிறந்த குழந்தைகளுக்கு நகைகள் அணிவிக்கும் போது மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துகிறார்கள்: குழந்தைகளின் சருமம் பெரியவர்களை விட 3 மடங்கு லேசான மெல்லிய தன்மையில் இருக்கும் . அதில் கூர்மையான விளிம்பு பட்டாலும் கூடி எளிதில் காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

குழந்தைகள் விரைவில் வளர்ச்சிப்பெற்று உடல் எடையும் அதிகரிக்கக்கூடும், சரியான நேரத்தில் மோதிரத்தைக் கவனிக்காவிட்டால் விரல் இறுகி, ரத்த ஓட்டம் தடைபடும் அபாயம் உண்டு. கைக்குழந்தைகள் தங்கள் கைகளை வாயில் வைப்பது இயல்பான குணம். ஆபரணங்களின் வடிவமைப்பு உருண்டையாக இல்லாமல் இருந்தால் ஈறுகளில் காயம் ஏற்படலாம்.

இப்படி இத்திட்டம் அனைவராலும் பாராட்டினைப் பெற்றிருந்தாலும், அதே சமயம் பச்சிளம் குழந்தைகளுக்கு கூர்மையான மோதிரங்கள் அணிவதால் அவர்களின் தோலில் கீறல்கள் ஏற்பட்டு பல சிக்கல்களை உண்டாக்க கூடியதாக அமையும் என்று மருத்துவ நிபுணர்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version