back to top
16.5 C
London
Tuesday, September 29, 2026
No menu items!
Homeசினிமாகொளுத்திப் போட்ட கங்கை அமரன்... ரிப்ளே கொடுத்த VP... ரியாக்ட் செய்த SK..! - Kumudam

கொளுத்திப் போட்ட கங்கை அமரன்… ரிப்ளே கொடுத்த VP… ரியாக்ட் செய்த SK..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வெங்கட் பிரபுவின் திரைப்பயணம் குறித்து பேசிய கங்கை அமரன், தனது மகனின் வளர்ச்சி மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

அப்போது, வெங்கட் பிரபு இயக்கவிருந்த ஒரு திரைப்படம் தாமதமானது குறித்து பேசிய அவர், குறிப்பிட்ட நடிகர் ஏற்கெனவே அந்தப் படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருந்ததாகக் கூறினார். அந்த நடிகரை மனதில் வைத்தே கதையை உருவாக்கியதுடன், படத்துக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக அமெரிக்கா சென்று தேவையான வேலைகளையும் முடித்ததாகவும் தெரிவித்தார். ஆனால், அந்த நடிகர் நடித்த மற்றொரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, தனது அடுத்தடுத்த படங்களில் வேறு இயக்குநர்களுடன் பணியாற்ற முடிவு செய்ததாக கங்கை அமரன் கூறினார்.

இதனால், அந்த நடிகருக்காக வெங்கட் பிரபு தொடர்ந்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தான் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். “அவன் உன்னை தவிர்க்கும்போது நீயும் அவனை தவிர்த்துவிடு. அவன் படம் பண்ணக்கூடாது” என்ற வகையில் வெங்கட் பிரபுவிடம் தான் கூறியதாக கங்கை அமரன் தெரிவித்தார். எனினும், அந்த நடிகர் யார் என்பதை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. “அந்த நடிகர் யார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்” என்ற வகையிலேயே அவர் பேசியிருந்தார்.

கங்கை அமரனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதும், அவர் குறிப்பிட்ட நடிகர் சிவகார்த்திகேயனாக இருக்கலாம் என ரசிகர்கள் சிலர் யூகிக்கத் தொடங்கினர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருந்ததையும், அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்ததாக வெளியான தகவல்களையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிறகு, அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்ததையும் ரசிகர்கள் இந்த விவகாரத்துடன் இணைத்துப் பேசி வருகின்றனர். ஆனால், கங்கை அமரன் தனது பேட்டியில் நடிகரின் பெயரை குறிப்பிடவில்லை. 

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் உருவான விவாதத்துக்கு வெங்கட் பிரபு விளக்கம் அளித்தார். சிவகார்த்திகேயன் தனக்கு எப்போதும் அன்பான நண்பர் என்றும், சகோதரர் போன்றவர் என்றும் குறிப்பிட்ட வெங்கட் பிரபு, இந்த விவகாரத்தை வைத்து தேவையற்ற சர்ச்சைகள் உருவாக வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

தனது மகன் தொடர்பான ஒரு திரைப்படம் தாமதமானதால், ஒரு தந்தையாக கங்கை அமரனுக்கு ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாகவே அவர் அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தனது தொழில்முறை விஷயங்கள் குறித்து தான் யாரிடமும் விரிவாகப் பேசுவதில்லை என்றும், தனது தந்தையிடம்கூட படங்கள் தொடர்பான முழு விவரங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் அந்தத் திரைப்படத்தைத் தொடங்க முடியாமல் போனதாகக் கூறிய அவர், இதில் யார் மீதும் தனக்கு எந்தவித மனவருத்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இதனால், கங்கை அமரனின் பேச்சால் உருவான சர்ச்சைக்கு வெங்கட் பிரபு விளக்கம் அளித்ததுடன், சிவகார்த்திகேயனுடன் தனது நட்பிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், வெங்கட் பிரபுவின் பதிவுக்கு சிவகார்த்திகேயனும் பதிலளித்துள்ளார்.

“சார், நாம குடும்பம். இதுக்கெல்லாம் போய் நீங்க சீரியஸா ரிப்ளை பண்ணிக்கிட்டு இருக்கீங்க!” என அன்புடன் குறிப்பிட்டுள்ள சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவின் வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார். உங்கள் அடுத்த படைப்புக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, வெங்கட் பிரபு மீதான தனது ரசிக மனநிலையையும் வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன், “சார், இதை நான் ஏற்கெனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன்… நான் எப்போதும் ஒரு VP ரசிகனாகவே இருப்பேன்” என தெரிவித்துள்ளார். மேலும், “விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் சார்” என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

கங்கை அமரனின் பேச்சால் தொடங்கிய விவாதம், வெங்கட் பிரபுவின் விளக்கம், அதற்கு சிவகார்த்திகேயனின் இந்த பதில் என தற்போது வேறொரு கோணத்தில் திரும்பியுள்ளது. அதேநேரம், கங்கை அமரன் குறிப்பிட்ட அந்த நடிகர் உண்மையில் யார் என்ற கேள்விக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் இல்லை.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here