Home அரசியல் ‘வீட்டுவேலைச் செய்யத்தான் பெண்களா?’ – சர்ச்சைக்குள்ளாகும் அமைச்சரின் பேச்சு… சரமாரியாக கேள்வி கேட்கும் உ.வாசுகி! –...

‘வீட்டுவேலைச் செய்யத்தான் பெண்களா?’ – சர்ச்சைக்குள்ளாகும் அமைச்சரின் பேச்சு… சரமாரியாக கேள்வி கேட்கும் உ.வாசுகி! – Kumudam

0



அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 120 நாட்கள்தான் ஆகியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ஒரு பெண் திருமணம் செய்து புதிய வீட்டுக்கு வரும்போது, அங்கு அஞ்சறைப் பெட்டியில் அரிசி, கடுகு, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளவே சில நாட்கள் ஆகும் என்று உதாரணம் கூறினார்.

அதேபோல், புதிய அரசும் நிர்வாக நடைமுறைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கு கால அவகாசம் தேவை என்றும், தங்கள் ஆட்சியில் லஞ்சம், ஊழலுக்கு இடமில்லாத வகையில் நிர்வாகம் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்துதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அவரது பேச்சு குறித்து உ.வாசுகி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“ஆட்சிக்கு அவகாசம் கேட்பது அவர்களின் உரிமை. ஆனால், புதிய வீட்டுக்கு வரும் பெண் அஞ்சறைப் பெட்டியில் பொருட்களைத் தேடுவதற்கு பல நாட்கள் ஆகும் என்ற ஒப்பீடு ஏன்?” என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

ஒரு வீட்டில் இருக்கும் பொருட்களைத் தெரிந்துகொள்வது பெண்ணின் பொறுப்பு மட்டுமே போல இந்த உதாரணம் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட உ.வாசுகி, அந்த வீட்டில் பிறந்து வளர்ந்த கணவருக்கும் வீட்டு வேலைகளில் பங்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணம் என்பது பெண் வீட்டு வேலைகளைச் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடு மட்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, உயர்கல்வித்துறையை கவனிக்கும் அமைச்சரே இப்படியான பாலினப் பார்வை கொண்ட கருத்தை தெரிவிப்பது கல்வித்துறைக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், அஞ்சறைப் பெட்டியில் அரிசியை வைப்பது தொடர்பான அமைச்சரின் உதாரணத்தையும் கேள்விக்குள்ளாக்கிய உ.வாசுகி, “அமைச்சருக்கு அஞ்சறைப் பெட்டியும் தெரியவில்லை.. பாலின நிகர்நிலையும் புரியவில்லை” என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அருகில் இருந்து சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து, அமைச்சர் பேச்சு மற்றும் ஜோதிமணியின் எதிர்வினை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version