back to top
16.1 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeசினிமாபட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்.. 90 வயதில் மறைவு! - Kumudam

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்.. 90 வயதில் மறைவு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்த தனது ஆழமான உரைகளாலும் பிரபலமானார்.

திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள சாலமன் பாப்பையா, தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்காக தொடர்ந்து பங்களித்து வந்தார். அவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் கடந்த 2000ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கான அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

பட்டிமன்றங்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ளார். ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சாலமன் பாப்பையாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here