back to top
20.7 C
London
Sunday, September 13, 2026
No menu items!
Homeஉலகம்NEPAL FLOODS: 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு! நேபாள வெள்ளத்தில் நடந்த அதிசயம்! -...

NEPAL FLOODS: 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு! நேபாள வெள்ளத்தில் நடந்த அதிசயம்! – Kumudam

Date:

Related stories

லண்டன் டூ தாராபுரம்… கேப் விடாத விஜய்… கேண்டிடேட்டுக்காக சுடசுச பிரசாரம்..?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பணிகளை...

Mandaadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி...

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட்ரபிள்’?

தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வரும் கே.என். நேருவைச்...

Mandadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி...
spot_imgspot_img



நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 9 நாட்களாக காணாமல் போன இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிஷூலி 3ஏ நீர்மின் திட்டத்தின் (Trishuli 3A Hydropower Project) சுரங்கப் பகுதியில் இருந்து மீட்புப் படையினர் அவர்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுரங்கங்களுக்குள் சிக்கினர்.

சுரங்கத்திற்குள் கேட்ட குரல்… மீட்பு பணியில் திருப்புமுனை :

நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிஷூலி 3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், சுரங்கத்திற்குள் இருந்து மனிதர்களின் குரல் கேட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, சுரங்கத்தின் சிறிய வழிப்பாதை வழியாக இரண்டு தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிருடன் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளில், மீட்புப் படையினர் மண்ணால் மூடப்பட்ட நிலையில் இருந்த ஒருவரை சுரங்கத்திலிருந்து வெளியே தூக்கி கொண்டு வரும் காட்சி இடம்பெற்றது. அவரை மீட்கும் போது அங்கிருந்தவர்கள் கைதட்டி உற்சாகம் தெரிவித்தனர். பின்னர் மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

42 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது :

திரிஷூலி 3ஏ திட்டத்தின் நிலத்தடி மின் உற்பத்தி மையத்திற்குச் செல்லும் சுரங்கம் சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த சுரங்கப் பகுதியில் சிக்கியிருந்த 42 தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பஸ்நெட், முதற்கட்டமாக ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதை உறுதி செய்தார். தொடர்ந்து, மேலும் ஒருவர் மீட்கப்பட்டதாக நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ராம் நியூபானே தெரிவித்தார்.

பல நீர்மின் திட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் மாயம் :

நேபாள அதிகாரிகளின் தகவலின்படி, 12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்கள் தற்போது காணாமல் போயுள்ளனர். இதில் சுமார் 500 பேர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காணாமல் போனவர்களில் சீனா, தென் கொரியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு :

ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

நேபாள பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, இதுவரை 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத் எல்லைப் பகுதியிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சீன தரப்பில் பலர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“மீட்பில் அதிசயங்கள் நடக்கும்” – நம்பிக்கை தெரிவித்த மீட்பு அதிகாரிகள் :

சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என இந்திய ராணுவ அதிகாரி கர்னல் பரிக்ஷித் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

“சுரங்கத்திற்குள் சிக்கிக் கொள்வது மிகவும் சவாலான நிலை. வெளிச்சம் இல்லாததால் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் தனிமையில் இருப்பது குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும்” என அவர் கூறினார்.

இருப்பினும், 9 நாட்களுக்கு பிறகு இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புக் குழுவினருக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தொடர்ந்து சுரங்கங்களில் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம் :

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சிட்வான், நுவாகோட், நவல்பராசி மற்றும் ரசுவா உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பல நாட்கள் கடந்த நிலையிலும், உயிருடன் உள்ளவர்களை மீட்கும் நம்பிக்கையுடன் மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here