Home அரசியல் கூட்டணிக் கட்சிகளுக்கு டாட்டா… அரசியல் ஆட்டத்தைத் தொடங்கிய விஜய்? – Kumudam

கூட்டணிக் கட்சிகளுக்கு டாட்டா… அரசியல் ஆட்டத்தைத் தொடங்கிய விஜய்? – Kumudam

0


2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம்தமிழர்கட்சி, உள்ளிட்ட கட்சிகளுடன் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றி கழகமும் போட்டியிட்டது. புதிதாக தொடங்கிய கட்சியின் மீது யாருக்கும் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் அக்கட்சி தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத தேர்தல் முடிவை தமிழ்நாடு சந்தித்தது. 

பல ஆண்டுகளாக அதிமுக, திமுக  என இரு கட்சிகளின் கொடி  மட்டுமே பறந்த நிலையில் தற்போது புதிதாக தொடங்கிய தவெக கட்சியின் கொடியை மக்கள் பறக்க செய்துள்ளார்கள். மே 4 ஆம் தேதி அன்று யாரும் எதிர்பாராத விதமாக 118 இடங்களில் 108 இடங்களை கைப்பற்றி தவெக  ஆட்சியை பிடித்தது. ஆனால் இதில் ஒரு சிக்கல். ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்டதால் தவெக அரசு 108 இடங்கள் மட்டும் தான் கைப்பற்றியது. 

இதனிடையே ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கூட்டணிக்கட்சிகளின் ஆதரவை கோரியது. அப்போது சட்டமன்றத்தில் தனிபெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், விசிக, உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.

தொடக்கத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில்  தற்போது அந்தக் கட்சிகளுக்கு எதிரான விமர்சனங்களும் அரசியல் ரீதியான உரசல்களும் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

இதனால் தவெக தனது கூட்டணிக்கட்சிகளையே படிப்படியாக விலக்க முயற்சிக்கிறதா? என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது. இதனிடையே தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பல்வேறு நிகழ்வுகளில் இன்றைய CMயாக இருக்கக் கூடிய விஜய்  நாளைக்கு PMயாக மாறுவார்  என்று கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் விஜய்க்கு முக்கிய பங்கு இருக்கும் என்ற இந்தப் பேச்சு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடன் நேரடியான அரசியல் உரசலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்கால கூட்டணி தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் தவெகவினரின் பேச்சு  கூட்டணி கணக்கில் புதிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே மதிமுகவைப் போல அதிமுகவும் கரைந்து போகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து மதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியை ஒப்பிட்டு மற்றொரு கட்சியின் எதிர்காலத்தை பற்றி விமர்சிப்பது கூட்டணி உறவுகளுக்குள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என அந்தக் கட்சி தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் மூலம் தவெகவை ஆதரித்து வரும் கட்சிகளுக்கும் தவெகவும் இடையிலான அரசியல் உறவில் விரிசல் ஏற்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்குகளைத் தொடங்கியுள்ளன.  குறிப்பாக தேர்தல் நேரத்தில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணிக் கட்சிகள் அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவே தவெக இந்த அரசியல் அணுகுமுறையை கையில் எடுத்திருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் அதிக தொகுதிகள், முக்கியமான தொகுதிகள் மற்றும் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் இருக்கும். இது போன்ற சூழலில், முன்கூட்டியே தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் கூட்டணிக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தியைக் குறைக்க தவெக முயற்சிக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

மேலும் தவெகவின் தற்போதைய அரசியல் மூவ் பார்க்கும் போது கூட்டணி அரசியலைத் தாண்டி எதிர்காலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே இலக்கு என்ற செய்தியை கட்சி மறைமுகமாக வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

தவெக ஆதரவு அளிக்கும்  கட்சிகளின் அரசியல் செல்வாக்கை குறைத்து தனிப்பட்ட வாக்கு வங்கியுடன் வலுப்படுத்துவது நீண்டகால திட்டமாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஒரு புறம் காங்கிரஸுடன் பிரதமர் விவகாரம் தொடர்பான உரசல் மறுபுறம் மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சுற்றியுள்ள சர்ச்சையான கருத்துகள் என தவெக கூட்டணிக்குள் அடுத்தடுத்து அரசியல் சலசலப்புகள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் தவெகவின் அணுகுமுறைக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகின்றன என்பதும் வரவிருக்கும் தேர்தல்களில் கூட்டணி தொடருமா என்பதும் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.

ஆதரவு தந்த கட்சிகளுடன் இணைந்து பயணிக்குமா தவெக? அல்லது தேர்தல் நெருங்கும் முன்பே கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டு தனிப்பாதையில் பயணிக்குமா? என்பதே தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version