back to top
22.7 C
London
Tuesday, August 18, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதவெக அரசின் 100 நாள் ஆட்சி; ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி- வீடியோ வெளியிட்ட முதல்வர்...

தவெக அரசின் 100 நாள் ஆட்சி; ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி- வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி, த.வெ.க. அரசின் 100-வது நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் செய்தி மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தனது பதிவில், “100 நாள் ஆட்சி என்பது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” எனக் குறிப்பிட்டு, அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சமூக நல திட்டங்கள்

* ரூ.560 கோடி ஒதுக்கீட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது.

* திருமண நன்னாளை சிறப்பிக்கும் வகையில் ‘அண்ணனின் சீர்’ திட்டத்தின் மூலம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்குவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’ மற்றும் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளன.

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு

* கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 மற்றும் நெல்லுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 எனச் சிறப்பு ஊக்கத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டமான ‘TN-VETTRI’ மூலம் சுகாதாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த ஆண்டிற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ‘வெற்றி 150’ திட்டத்தின் கீழ் 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

கல்வி, இளைஞர் நலன் மற்றும் திறன்பயிற்சி

* ரூ.2,000 கோடி செலவில் ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

* ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ ரூ.710 கோடி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

* ‘வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்’ மூலம் 12 லட்சம் மாணவர்களுக்கும், 1 லட்சம் இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சட்டம் – ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு நடவடிக்கைகள்

* போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* மதுவிலக்கு கொள்கையின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

பொருளாதாரம், மின்சாரம் மற்றும் எளிய நிர்வாகம்

* வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

* எளிய மற்றும் ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கிட ‘வெற்றி வீடு திட்டம்’ மூலம் ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

* வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி வழங்குதல் மற்றும் நேரடி தொடர்பற்ற (Contactless) பத்திரப் பதிவு முறைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here