நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை தொகுதி மறுவரையறை தொடர்பாக மசோதாக்கள் கொண்டுவந்த போது திமுக இண்டி கூட்டணியில் இருந்ததால் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிராக திமுக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. குறிப்பாக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதனை தொடர்ந்து அப்போதைய முதலமைச்சரான முக ஸ்டாலின் தொகுதி மறுவரையறை நகலை எரித்து திமுக நிலைப்பாட்டை உறுதி செய்திருந்தார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற வாக்கெடுப்பில் திமுக எதிர்த்து வாக்களித்தால் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் போனது இது மத்திய அரசுக்கு பெரும்இடியாக இருந்தது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மசோதாவை கொண்டு வந்து வெற்றி பெற்று விடலாம் மத்திய அரசு போட்டத் திட்டத்தை திமுக சுக்குநுறாக நொறுக்கியது.
இந்நிலையில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு மேற்குவங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக தோல்வியை சந்தித்த திமுக ஆட்சியை இழந்தது.
விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விவசாயிகள் பிரச்சனையை பிரதான எதிர்க்கட்சியான திமுக கையில் எடுத்த நிலையில் அது குறித்து விவாதிக்காமல் தொகுதி மறுவரையறை பிரச்சனையை திமுகவுக்கு எதிராக தவெக அரசு கையில் எடுத்தது.
சட்டமன்ற தோல்வி விரக்தியால் பாஜகவுடன் இணைந்து தொகுதி மறுவரையறை மறைமுக ஆதரவை திமுக தருவதாக தவெக குற்றம்சாட்டியது. திமுக தாங்கள் ஆட்சி இருந்த போது எடுத்த நிலைப்பாட்டையே அதாவது தொகுதி மசோதாவை எதிர்க்கும் நிலைப்பாட்டை தாங்கள் உறுதியாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்திருந்தார்.
விவசாயிகள் பிரச்சனையை மடைமாற்றி தொகுதி மறுவரையறை பிரச்சனையை தவெக அரசு கொண்டு வருவதாக திமுக குற்றம்சாட்டியது. இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று ஆகஸ்ட் 8 நடத்திய நிலையில் திமுக அதிமுக பிரதான எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தன,
இத்தகைய சூழலில் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு திமுக செலுத்தவுள்ள வாக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுக எதிர்த்து வாக்களிக்குமா,? அல்லது வெளிநடப்பு செய்யுமா? என்ற பல்வேறு கேள்விகள் திமுகவை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றன.
திமுக எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது. ஒரு வேளை வெளிநடப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா சுலபமாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் மசோதா நிறைவேற வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதாவது 543 எம்பிக்களில் இரண்டு பங்கு என்பது 362 எம்பிக்கள் ஆகும்.
ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ எம்பிக்கள் எண்ணிக்கை 318 உள்ள நிலையில் அவர்களுக்கு கூடுதலாக 44 எம்பிக்கள் எண்ணிக்கை தேவைப்படுகிறது. இண்டி கூட்டணியில் 225 பேர் இருந்ததால் கடந்த முறை மசோதா நிறைவேறவில்லை.அதில் திமுக மக்களவையில் எம்பிக்கள் இதில் அடங்கும் ஒரு வேளை திமுக வெளி நடப்பு செய்யும் பட்சத்தில் அவையில் இருக்க்ம எம்பிக்கள் எண்ணிக்கையில் இரண்டில் மூன்று பங்கு கணக்கிடும் போது ஆளும பாஜகவுக்கு ஆதரவாக சூழ்நிலையில் உருவாகும்.
இதன் மூலம் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் எனவே தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வந்தால் எதிர்த்து வாக்கு அளிக்குமா? இல்லை வெளிநடப்பு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் எடுக்கும் போகும் முடிவு குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு நாட்டில் முக்கியமான மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னாள் கொளத்தூர் எம்எல்ஏவின் முடிவுக்காக எதிர்க்கட்சிகள் காத்து கொண்டிருக்கின்றன.





