Home தமிழ்நாடு ஆன்லைனில் மது முன்பதிவு செய்வது எப்படி? தாமதமானால் பாட்டிலுக்கு 10 ரூபா..! – Kumudam

ஆன்லைனில் மது முன்பதிவு செய்வது எப்படி? தாமதமானால் பாட்டிலுக்கு 10 ரூபா..! – Kumudam

0


கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதுடன், பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் தனி இணையதளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. விரைவில் இதற்கான மொபைல் செயலியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைனில் மதுபானம் வாங்குவது எப்படி?

வாடிக்கையாளர்கள் tasmac.tn.gov.in இணையதளத்தில் நுழைந்து முதலில் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் Shop Locator வசதி மூலம் அருகிலுள்ள டாஸ்மாக் கடையை தேர்வு செய்து, அங்கு கிடைக்கும் மதுபானங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தேவையான பொருட்களை கார்ட்டில் சேர்த்த பிறகு, செல்போன் எண்ணை பதிவு செய்து OTP மூலம் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் ஆன்லைனில் பணம் செலுத்தினால், QR குறியீடு அடங்கிய ரசீது உருவாகும். அந்த QR குறியீட்டை தேர்வு செய்த டாஸ்மாக் கடையில் ஸ்கேன் செய்து ஆர்டர் செய்த மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கவனிக்க வேண்டிய விஷயம்

ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட ஆர்டரை அதே நாளிலேயே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாளில் வாங்கப்படாத ஆர்டர்களுக்கு ரூ.10 சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள தொகை வாடிக்கையாளரின் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையை எளிதாக பயன்படுத்தும் விதமாக, ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கும் வழிகாட்டு வீடியோவையும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது முதல்முறையாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version