Home தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு புது லுக்கில் வந்த விஜய்.. சில்வர் புளூ சட்டையின் ரகசியம் என்ன? – Kumudam

பட்ஜெட்டுக்கு புது லுக்கில் வந்த விஜய்.. சில்வர் புளூ சட்டையின் ரகசியம் என்ன? – Kumudam

0


இதற்கு முன்பு நடைபெற்ற முக்கிய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சட்டமன்றக் கூட்டங்களில் கருப்பு நிற பிளேஸர் அல்லது கோட்-சூட் அணிந்து வந்த முதலமைச்சர் விஜய், இந்த முறை எளிமையான சில்வர் புளூ நிற சட்டையில் பேரவைக்கு வந்திருந்தார். அவரது இந்த உடைத் தேர்வு அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பட்ஜெட் போன்ற முக்கிய நாளில் முதலமைச்சர் எளிமையான தோற்றத்தைத் தேர்வு செய்திருப்பது திட்டமிட்ட முடிவாக இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. நிதி நிலை, அரசின் எதிர்கால திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னுரிமைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் சூழலில், பொதுமக்களுடன் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த தோற்றம் அமைந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

மேலும், சில்வர் புளூ நிறம் அமைதி, நிதானம், தெளிவான சிந்தனை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் நிறமாக அரசியல் உளவியலில் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த நிறம் முதலமைச்சருக்கு அதிர்ஷ்டம் தரும் என்பதால் அதனை தேர்வு செய்திருக்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.
 
நிதி நெருக்கடி, கடன் சுமை மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து அரசு எதிர்கொள்ளும் சூழலில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், முதலமைச்சர் விஜய்யின் உடைத் தேர்வும் அரசியல் விவாதத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version