back to top
30.2 C
London
Tuesday, August 4, 2026
No menu items!
Homeஅரசியல்தவெகவின் உதவியால்... திமுகவில் பவர் சென்டரான உதயநிதி...! - Kumudam

தவெகவின் உதவியால்… திமுகவில் பவர் சென்டரான உதயநிதி…! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தஞ்சையில் நேற்று (03.08.3036) திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், விவசாயி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும் ,மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் ,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்  முதலமைச்சர் விஜயை தரக்குறைவாகவும்,பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும் கூறி  தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டு 9 பிரிவுகளின் கீழ்  காலை 11 மணிக்கு இந்த நடவடிக்கை நடந்துள்ளது.

இந்த நடவடிக்கையால் முதலில் நம் பார்வைக்கு ஆளுங்கட்சியான முதலமைச்சரின் விஜயின் பவர் மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் இதற்கு பின்னால் இருக்கின்ற மறைமுக அரசியலை  உற்றுநோக்க வேண்டும். விஜய் விரித்த வலையில் உதய் சிக்காமல் உதய் விரித்த வலையில் தான் தற்போது முதலமைச்சர் சிக்கியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளன.

திமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிரித்த முகத்துடன் இது ஒரு செம காமெடி நாடகம் என்று கூறிச் சென்ற காட்சி திமுக தொண்டர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. தலைமைப்பண்பு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வீதியின் முன் திரண்டு போராடிய வேளையில், அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் களத்தில் நின்றதன் மூலம், திமுகவின் அடுத்த கட்ட வலுவான தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை மூலம், திமுகவுக்குள் இருந்த சிறுசிறு உட்கட்சி சலசலப்புகளும் மறைந்து, அனைத்து பிரிவினரும் உதயநிதி ஸ்டாலினின் பின்னால் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே உதயநிதிக்கு எதிராக திமுகவில்  மூத்த தலைவர்கள் ,கனிமொழி மற்றும் ஆதரவாளர்களே எதிர்த்து வரும் நிலையில், தலைமைப்பண்பு  குறித்து மு.க ஸ்டாலின் இடைத் தேர்தல் முடிந்து பார்ந்து கொள்வோம் என்றிருந்த சூழ்நிலையில் தற்போது இந்த கைது நடவடிக்கையால் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு மிக பெரிய ஆதரவு  திரண்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, உதயநிதியின் பேச்சை ஒரு சாதாரண அரசியல் விமர்சனமாகக் கடந்து செல்லாமல், நள்ளிரவில் தனிப்படை அமைத்து, சென்னை வரை வந்து கைது செய்யும் அளவுக்கு விவகாரத்தைப் பெரிதாக்கியுள்ளது. இதன் மூலம், பொதுமக்களின் பார்வையில் ஆளுங்கட்சியான தவெகவிற்கு ஒரே வலுவான மாற்று அல்லது முதன்மை எதிரி உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை அரசாங்கமே மறைமுகமாக ஒப்புக்கொண்டது போலாகிவிட்டது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல் திமுக அரசு, முதல் மாங்காய் ஆளுங்கட்சியின் பழிவாங்கும் அரசியல் மற்றும் அடக்குமுறையை என்ற பிம்பத்தில் மக்கள் தீவிரமாக விதைத்து தவெகவின் ஆட்சி மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. இரண்டாவதாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற அனைத்து கட்சிகளை ஓரங்கட்டி  விட்டு ஆளுங்கட்சிக்கு நேரடி சவாலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இந்த சம்பவம் திமுக தொண்டர்களுக்கு புதிய அரசியல் ஆற்றலை வழங்கியுள்ளது. எதிர்க்கட்சியை ஒடுக்க நினைத்து எடுக்கப்பட்ட இந்த முடிவு இறுதியாக உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுக்க வைத்துள்ளதா? அல்லது தவெகவின் சுய பிம்பத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதா? என்று பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here