back to top
28.5 C
London
Monday, August 3, 2026
No menu items!
Homeசினிமா20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சூர்யா – ஜோதிகா..! - Kumudam

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சூர்யா – ஜோதிகா..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


The Hollywood Reporter India இதழின் ஆகஸ்ட் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஜோடி, தங்களது காதல், குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். 

1999-ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா – ஜோதிகா, தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் ஜோடியாக நடித்தனர். திரையில் மலர்ந்த நட்பு பின்னர் காதலாக மாறி, 2006-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் முழுநீள படத்தில் இணைந்து நடிக்கவில்லை. தற்போது, நல்ல கதை அமைந்தால் மீண்டும் இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் இந்த அறிவிப்பை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

சூர்யா – ஜோதிகா ஜோடியாக முழுமையான கதாபாத்திரங்களில் கடைசியாக நடித்த திரைப்படம் 2006-ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றியிருந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் முழுநீள காதல் கதையில் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here