back to top
29.5 C
London
Monday, August 3, 2026
No menu items!
Homeசினிமாதமிழக அரசு அங்கரீத்த முதல் த்ரிஷா சங்கம் ? ..... சர்ச்சை கிளப்பிய போஸ்டர்கள்....! -...

தமிழக அரசு அங்கரீத்த முதல் த்ரிஷா சங்கம் ? ….. சர்ச்சை கிளப்பிய போஸ்டர்கள்….! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தென்னிந்தியத் திரைப்பட உலகின் பிரபல முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் 1999ல் மிஸ் சென்னை பட்டம் வென்று மாடலிங் துறைக்கு பிறகு சினிமாவில் நுழைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சாமி, கில்லி, விண்ணைத் தாண்டி வருவாயா, லியோ, மங்காத்தா, உனக்கும் எனக்கும் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.பல பிலிம்பேர் மற்றும் கலைமாமணி விருதுகளைப் பெற்றள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் லியோ மற்றும் சூர்யாவுடன் கருப்பு ஆகிய திரைப்படங்களை நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது  த்ரிஷா அரசியல் நோக்கி பயணம் எடுப்பாரா என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 118 தொகுதிகளில் 108 இடங்களைக் கைப்பற்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராக பதவியேற்று மூன்று மாதங்கள் ஆன நிலையில் விஜயை தொடர்ந்து த்ரிஷாவும் அரசியல் வர இருப்பதாக ஒரு டாக் போய்க் கொண்டிருக்கிறது.

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற போது முதல் வரிசையில் அமர்ந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தியதுடன் மட்டுமில்லாமல் திருமண நிகழ்வில் இருவரும் ஒரே கலரில் ஆடை அணிந்து கொண்டு இருவரும் ஒன்றாக செல்வதும்,  நடிகர் அஜித்தின் தாயார் இறந்த போது இருவரும் ஒன்றாக சென்றதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக ஆனது. 

ஏற்கனவே முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்த நிலையில் காலியாக உள்ள திருச்சி கிழக்குத் தொகுதியில்  நடிகை த்ரிஷாவை போட்டியிட இருக்கிறார் என்ற  டாக் போய் கொண்டிருந்த போது ஆனால் இதைப்பற்றி தவெக தரப்பில்  எந்த வொரு உறுதியளிக்கப்படவில்லை. இந்நிலையில்,மதுரையில் இன்று நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து  அவரது  ரசிகர்கள் சும்மா இல்லாமல் வேலு நாச்சியாரின் உடையில் த்ரிஷா இருக்கும் படம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையின் படங்களை இணைத்து முக்கிய இடங்களில் எல்லாம்  போஸ்டர் ஒட்டியிருப்பது தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா  சமீப காலமாகவே பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு வருவதால் அரசியல் நோக்கி இவருடைய பயணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்நிலையில் மதுரையில் முதன்முறையாக த்ரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டு த்ரிஷாவிற்கு அரசியலுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது

தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்க்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரின் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் த்ரிஷா படங்களும் இடம்பெற்றுள்ளது

இந்த போஸ்டரால் தற்போது விஜயை தொடர்ந்த நடிகை த்ரிஷாவும் அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளரா? ஒரு வேளை அரசியலுக்கு வந்தால் விஜய்க்கு ஆதரவு கொடுப்பாரா? இல்லை விஜய்க்கு ஏதிராக கட்சி தொடங்குவாரா?  என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here