Home சினிமா ஜனநாயகன் திரைப்படம் வசூலில் சரிவு! ரிலீஸுக்கு முன் லீக் ஆனதால் பாதிப்பா? – Kumudam

ஜனநாயகன் திரைப்படம் வசூலில் சரிவு! ரிலீஸுக்கு முன் லீக் ஆனதால் பாதிப்பா? – Kumudam

0


முதலமைச்சர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் ‘ஜனநாயகன்’. சென்சார் பிரச்சினைகளுக்கு மத்தியில், படம் இணையத்தில் கசிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகும், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. ஆனால், வெளியான சில நாட்களிலேயே எதிர்பார்த்த வசூலை எட்டவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி சில நாட்களிலேயே வசூலின் வேகம் சற்று குறைந்துள்ளது. ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படம் இதுவரை ₹255.63 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், சில நாட்களிலேயே வசூல் வேகம் குறைந்துள்ளது.

தலைவரின் ‘கூலி’ படத்தின் வசூலை தாண்டும் என்று பல பில்டப்கள் எழுந்த நிலையில், விஜய் அவருடைய முந்தைய படத்தின் முதல் நாள் வசூலின் அருகில் கூட செல்லவில்லை. கோலிவுட்டின் முதல் நாளில்  அதிகப்படியான வசூலான படமாக விஜயின் ‘லியோ ‘  இருந்த நிலையில் தலைவரின் ‘கூலி’ அதை அடித்துநொறுக்கியது . 

விஜயின் படங்கள் வழக்கமாக முதல் நாளிலேயே ₹100 கோடியை கடந்துவிடும். ஆனால், ‘ஜனநாயகன்’ இரண்டாவது நாளில்தான் ₹100 கோடியை தாண்டியது. அந்த வகையில், 7-ஆம் நாளில் மொத்தமாக ₹11 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வார நாட்கள் என்பதால் வசூல் குறைந்திருந்தாலும், வார இறுதியில் நிச்சயம் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஆனால், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே படம் இணையத்தில் கசிந்ததே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று சிலர் கணிக்கின்றனர். அதுமட்டுமின்றி, படம் வெளியான நாளன்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், “மாணவர்களின் போராட்டத்தை விட விஜயின் திரைப்படம் முக்கியமா?” என்ற கேள்வியும் போராட்டக் களத்தில் தீவிரமாக எழுந்தது.

இதற்கு சில திரைப் பிரபலங்களும் ஆதரவு குரல் எழுப்பியதே குறைவான வசூலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நெட்டிசன்களில் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

“யார் என்ன சொன்னாலும், எங்க அண்ணனுக்கு நான்தான்டா செய்வேன்!” என்று தீவிர விஜய் ரசிகர்கள் கூறினாலும், பொதுமக்கள் மத்தியில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதையே வசூல் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த வார இறுதியில் வசூல் வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “வணக்கம் டா மாப்ள!” என்பதுபோல் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியாக இருப்பதால், அது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வசூலுக்கு சவாலாக அமையலாம் என்று மார்வெல் மற்றும் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் கூறுகின்றனர்.

விஜயின் கடைசி திரைப்படம் என்ற உணர்வில் இருந்த ரசிகர்களுக்கு, படம் இணையத்தில் கசிந்ததே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது சினிமா வாழ்க்கையின் நிறைவுப் படமாக இது அமைய வேண்டும் என்று எதிர்பார்த்த பலருக்கும், தற்போதைய வசூல் நிலவரம் சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version