Home அரசியல் திமுகவில் அடுத்த விக்கெட் : பனையூரை நோக்கி பன்னீர்செல்வம்? பதறிப்போன அறிவாலயம்…. – Kumudam

திமுகவில் அடுத்த விக்கெட் : பனையூரை நோக்கி பன்னீர்செல்வம்? பதறிப்போன அறிவாலயம்…. – Kumudam

0


2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடியான திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்தக்கட்ட  திருப்பமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி பிப்ரவரி 27 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலை உருவாகியதால், திமுகவில் இதுவரைக்குமே பன்னீர்செல்வத்திற்கு எந்த வொரு முக்கியப் பதவியும் வழங்கப்படாமல் இருப்பதால் ஓ.பி.எஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே அதிமுகவிலிருந்து குதிரை பேரத்தின் வாயிலாக தவெக பலரும் தம்முள் இழுத்துக் கொண்டுள்ளனர்.சி.விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர்,கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன்,எஸ்.வளர்மதி,வெல்லமண்டி நடராஜன், ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் திமுகவிலிருந்து யாரும் தவெகவை நோக்கி செல்லாமல் இருந்த நிலையில் தற்போது திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செலயலராகப் பணியாற்றி வந்த திமுகவின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மீனா ஜெயக்குமார் தற்போது தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.இதற்கு முன்னாள் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மற்றும் போரூர் தொகுதி திமுகவின் முன்னாள் எம்எல்ஏ எம்எஸ் சண்முகம் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், .வெ..வில் சென்று இணைவதே சிறந்தது என்று ரவீந்திரநாத் தனது தந்தை .பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு .பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே .பன்னீர்செல்வம் .வெ..வில் இணைய வேண்டும் என்பதே அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமாக இருந்தது.

.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, .வெ.. பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அமைச்சர்கள் இருவரும் .பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் .வெ.. வலுகுறைந்து காணப்படுகிறது. அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது.

எனவே, அந்தக் குறையை .பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று .வெ.. தலைமை கருதுகிறது.இதனால்  முன்னாள் முதலமைச்சராக .பன்னீர்செல்வம் இருந்ததால், .வெ..வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், தனது எம்.எல்.. பதவியை ராஜினாமா செய்துவிட்டு .வெ..வில் .பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் .வெ.. சார்பில் மீண்டும் போட்டியிட .பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

மேலும் 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் .பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் .வெ.. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. .பன்னீர்செல்வம் .வெ.கவில் இணைவதன் மூலம் தேர்தலுக்கு பிறகு தி.மு..வில் இருந்து விலகி .வெ.கவில் இணையும் முதல் நபர் ஆவார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு .தி.மு.. மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து விலகி .வெ..வில் பலர் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது திமுகவிலிருந்தும் விலகி தவெகவில் இணையவது திமுக தரப்பினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுகவிலும் தவெக குதிரை பேரத்தை நடத்தியுள்ளதா? இனி திமுகவிலிருந்து விலகி எத்தனை விக்கெட்டுக்கள் தவெகவில் இணைய போகிறார்களோ? என்று அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version