back to top
25.1 C
London
Friday, July 31, 2026
No menu items!
Homeசினிமாமாணவர் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து: Followersகளை இழந்த நடிகை..! - Kumudam

மாணவர் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து: Followersகளை இழந்த நடிகை..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை, “வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என பேர்லே மானே கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், தனது பேச்சு சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களே தன்னை விமர்சிப்பதாக பேர்லே பதிலளித்தார். அவரை விமர்சித்த ஜோ மலாயிலுக்கு பதிலளித்த பேர்லே, அவரது ஏழு ஸ்லைடுகளைக் கொண்ட பதிவை “10 பக்க ஸ்கிரிப்ட்” என விமர்சித்ததுடன், அவரை “தோல்வியடைந்த திரைப்பட இயக்குநர்” என்றும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

Responsibility also means speaking with courage': Netizens slam Pearle  Maaney over viral CJP post | Mathrubhumi English

மேலும், தனது கருத்துகளை காரமாக்குவதற்காக “மிளகாய்த்தூள் மற்றும் அஜினோமோட்டோ” சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். அதேபோல், இந்தியக் கொடியில் உள்ள காவி நிறம் தனக்கு பிடிக்கும் என்பதால், காவி தனது விருப்பமான நிறம் என்றும் பேர்லே கூறியிருந்தார். இந்தக் கருத்தும் அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, ஜோ மலாயிலின் தந்தையும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சிபி மலாயிலை ‘தோல்வியடைந்த இயக்குநர்’ எனக் குறிப்பிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது தந்தையை விமர்சித்த பேர்லேவுக்கு ஜோ மலாயில் பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்பை அடுத்து பேர்லே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை நீக்கியதுடன், கருத்துப் பதிவிடும் வசதியையும் முடக்கியதாக கூறப்படுகிறது. மேலும், புறக்கணிப்பு அழைப்புகளுக்கு மத்தியில் சுமார் 2 லட்சம் followers-களை அவர் இழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here