Home அரசியல் அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த பெண் நிர்வாகி.. அதிரடியாக நீக்கிய தலைமை..! – Kumudam

அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த பெண் நிர்வாகி.. அதிரடியாக நீக்கிய தலைமை..! – Kumudam

0


அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.  இவர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜின் அறிவுறுத்தலின் பேரில் அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு விண்ணப்பித்ததாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும், பதவிகளைப் பெறுவதற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். 

மேலும், அமைச்சர் ஆனந்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நியமனங்கள் நடைபெறுவதாகவும், முதலமைச்சர் விஜய் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார் ஞானசௌந்தரி. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஞானசௌந்தரியை கட்சியில் இருந்து நீக்குவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையவழி (Online) முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி திருமதி M. ஞானசௌந்தரி, MS.No.4063/2015 அவர்கள், எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். 
மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்றிலிருந்து அவருடன் எந்தவித கட்சி தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனநாயக கட்சி இங்கு எல்லோருக்கும் உண்மையை தெரிந்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்றெல்லாம் சொல்கிறார்களே, ஆனால் பொதுச் செயலாளரே தவறு செய்தார் என்று கூறினால் உடனே கட்சியைவிட்டு நீக்குவார்களா? என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version