Home சினிமா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் சமந்தா… நாக சைதன்யாவுக்கு பதிலடியா இது..? – Kumudam

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் சமந்தா… நாக சைதன்யாவுக்கு பதிலடியா இது..? – Kumudam

0


திரைத்துறையில் கியூட் ஜோடியாக வலம் வந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடித்த இருவரும் காதலில் விழுந்தனர். இதைத் தொடர்ந்து ‘ஏ மாயா சேஸாவா’, ’மனம்’, ‘ஆட்டோநகர் சூர்யா’, ’மஜிலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு டிரீட் வைத்தனர். இப்படி ரீல் ஜோடியாக திரையில் மிளிரிய இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து ரியல் ஜோடியானார்கள். இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி இரண்டு முறை திருமணம் செய்துகொண்டனர். 

இப்படி பட்டாம்பூச்சி போல் படபடவென அழகாக இருந்த அவர்களது திருமண வாழ்க்கை 3 ஆண்டுகளிலேயே சிறகொடிந்து போனது அவர்களது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியது. அவர்களது பிரிவிற்கான காரணம் சரியாகத் தெரியாத நிலையில் அது குறித்து நெட்டிசன்கள் நாக்கு மேல் பல்லைப் போட்டு பேசியதை எல்லாம் யாராலும் மறக்க முடியாது. சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதான்யாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி அவர்களது பிரிவையும் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது ஒரு பக்கம் இருந்தால் மறுபக்கம் மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளானார் சமந்தா. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அடுத்தடுத்த சறுக்கல்களையும் சவால்களையும் மனம் தளறாமல் எதிர்கொள்ளும் சமந்தா, பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். எவ்வளவு பிரச்சனைகளை அவர் சந்தித்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகின் முன்னணி கதாநாயகியாகவே இருந்து வருவது ஆச்சரியப்படுத்தும் உண்மை. 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. எந்த வித அறிவிப்புமின்றி திடீரென நடந்த இந்த நிச்சயதார்த்தம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமந்தாவுடனான பிரிவிற்கு பிறகிலிருந்தே நாக சைதன்யாவுகும் சோபிதாவும் டேட்டிங் செய்து வருவதாகப் பல செய்திகள் அவ்வப்போது நமது காதுகளுக்கு வந்து சென்றது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்தம் சமந்தா ரசிகர்களை ட்ரிக்கர் செய்தது. இதனால் சமந்தா ரசிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா மீது தங்களது வண்மங்களைக் கக்கி வருகின்றனர்.

இப்படியான சூழலில் சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக புதிய தகவல் ஒன்று உலாவி வருகிறது. இந்தியில் ‘ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் நடித்துக்கொண்டிருக்கும்போது சமந்தாவுக்கும் அத்தொடரின் இயக்குநர் ராஜுவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. ராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் விரைவில் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சமந்தாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version