Home அரசியல் RED List-ல் முக்கிய அமைச்சர்கள்..? மாற்றத்திற்கு தயாராகும் தவெக..! – Kumudam

RED List-ல் முக்கிய அமைச்சர்கள்..? மாற்றத்திற்கு தயாராகும் தவெக..! – Kumudam

0



தலைமைச் செயலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் நபர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம். “அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும்கூட விரைவில் தங்கள் பண்புகளை வளர்த்துக்கொள்வார்கள் என்று முதல்வர் விஜய் நம்பினார். ஆனால், 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அந்த தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் அடாவடியில் ஈடுபட்டுவருவது விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இப்படி தாறுமாறான நடவடிக்கைகளில் முதலிடத்தில் இருப்பவர் அமைச்சர் சரத்குமார். பொது இடத்தில் வெளிப்படையாகவே போதைப் பவுடரை பயன்படுத்தியாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு விஜய்யை பெரிதும் வேதனை அடைய வைத்திருக்கிறது. தி.மு.க ஆட்சியாளர்களால்தான் போதைப் பொருள் கலாசாரமே தமிழகத்தில் அதிகரித்துவிட்டது என்று சட்டமன்றத்தில் நானே குற்றம்சாட்டியிருக்கிறேன். இப்படிப்பட்ட நேரத்தில் நமது அமைச்சரே அதில் சிக்கினால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? என சீனியர்களிடம் கோபத்தை காட்டியிருக்கிறார் விஜய்.

 

அதேபோல் விருதுநகரைச் சேர்ந்த பெண் அமைச்சர்களான கீர்த்தனா, ஜெகதீஸ்வரி இருவரின் நடவடிக்கைகளுமே முதல்வருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. இருவருக்கும் இடையே தங்கள் மாவட்டத்தில் யார் பெரியவர் என்ற ஈகோ உச்சத்தில் உள்ளது. தொழில்துறை அமைச்சரான தீர்த்தனாவிடம் இன்னமும் ரீல்ஸ் மோகம் குறையவில்லை என்பது புகார் அவரிடம் ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் ஜெகதீஸ்வரியும். கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை அவமரியாதை செய்து வருவதாக முதல்வர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இருவர் இடையிலான மோதலில் ஜெகதீஸ்வரி ஏற்கெனவே பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுடன் கொண்டிருந்த நட்பு தொடர்பான படங்கள் வெளியாகி தவெக. அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கால்நடை துறை அமைச்சரான கமலி, பணி மாறுதல் கோரும் அரசு அலுவலர்களிடம் சும்மா டிரான்ஸ்ஃபர் கேட்டால் எப்படி?’ என கேட்டதாக புகார் பறந்திருக்கிறது. அவரின் அப்பா செந்தில்நாதன், நாமக்கல் மாவட்ட தவெகவில் பொறுப்பு வகித்தவர். பாலியல் புகாரில் சிக்கி, கட்சிப் பதவி பறிக்கப்பட்ட பிறகும்கூட, தனது மகளின் துறைகளில் தலையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஒப்பந்தங்களை கையாள்வதும் புகார்களாக மாறியிருக்கின்றன.

 

சுற்றுச்சூழல் துறையில் எது ஒன்றும் தனக்குத் தெரியாமல் நடக்கக் கூடாது என உத்தரவே போட்டிருக்கிறாராம் அமைச்சர் ராஜீவ்வின் மாமனார் விஜயபாஸ்கர். இவர் ஏற்கெனவே சுற்றுச்சூழல் வாரியத்தில் உறுப்பினர் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பதால், எந்தெந்த வழியில் ஆதாயமடையலாம் என திட்டம் போட்டு செயல்படுகிறார் என்கிறார்கள்.

 

கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவின் அப்பா, துரை கருணாநிதியின் தலையீடு, துறையில் அதிகம் என்கிறார்கள். இவர் திருச்சி மாவட்ட தமா.கா.வில் பொறுப்பில் இருந்தவர் என்பதால், இவரே குவாரி உரிமையாளர்களிடம் பேசி வட்டுகளை உருட்டத் தொடங்கிவிட்டார்” என்கிறார்கள். 

இதுமட்டுமல்ல, இப்படியாக கிட்ட்த்தட்ட 10 அமைச்சர்கள் ரெட் லிஸ்டில் இருப்பதாகவும், விரைவில் அமைச்சரவையை மாற்ற தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version